நண்டு ரசம் (நண்டு சூப்) | நண்டு ரசம் சமையல் செய்முறை - {nandu rasam nandu soup recipe in tamil, Crap Rasam recipe}
நண்டு ரசம் செய்ய தேவையான பொருட்கள்:
நண்டு - 1,கரம் மசாலா,
கொத்தமல்லி தழை, கருவேப்பிலை - தேவைக்கேற்ப,
சின்ன வெங்காயம்,
தக்காளி,
பூண்டு,
மஞ்சள் பவுடர்,
மிளகு தூள்,
தேங்காய் பால்,
சர்க்கரை,
வெண்ணை,
மிளகாய் தூள்,
உப்பு.
நண்டு ரசம் செய்முறை (how to make crab rasam recipe):
முதலில் நண்டை ஒரு இடிக்கும் பாத்திரத்தில் போட்டு இடித்து வைத்துக்கொள்ள வேண்டும் இதை மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவைத்து நண்டு சாற்றை எடுக்க வேண்டும்.
பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொஞ்சம் வெண்ணை மற்றும் எண்ணெய் விட்டு சூடு பண்ண வேண்டும், வெண்ணை கரைந்து நுரை வந்தவுடன் அதில் கரம் மசாலா கருவேப்பிலை போடவேண்டும் சிறிது கிளறி விட்டு அதில் நறுக்கிய பூண்டு, இடித்து வைத்துள்ள மிளகு தூள்(தேவையான அளவு), சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சிறிது கிண்டி விட்டு அதில் சின்ன வெங்காயம் சேர்த்து வெங்காயம் பழுப்பு நிறம் வந்ததும் தக்காளி சேர்த்து அனலில் கிண்ட வேண்டும். பிறகு சிறிது கரம் மசாலா மற்றும் சில்லி பவுடர் சேர்த்து வதக்கவும், வதங்கிய பின் அதில் தேங்காய் பால் சேர்த்து சற்று கிண்ட வேண்டும், பின் ஏற்க்கனவே இடித்து எடுத்து வைத்திருந்த நண்டு சாற்றை இதனுள் நண்டோடு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சிறிது சர்க்கரை சேர்த்து (தேவையானால் சிறிது மிளகாய் தூள், தேங்காய் பால் சேர்க்கலாம்) சிறிது கொதிக்க விட்டு இறக்கும் பொழுது கொத்தமல்லி இலையை தூவி விட்டு அப்படியே அதை பெரிய வடிதட்டில் வடிகட்டி ரசத்தை எடுத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். ( More Rasam Recipes)
நண்டு ரசம் (நண்டு சூப்) சமையல்..
Social Plugin