சமீப காலமாக மொபைல் ஃபோனை ஒரு மூன்று வருடங்களுக்கு மேல் மாற்றாமல் வைத்திருப்பதே மிக அதிசயமான இந்த காலகட்டத்தில் நம்மின்
ஃபோன்களை செகன்ட் ஹேன்ட்ல வித்தாலும் வாங்குபவர்கள் முதலில் செய்யும் காரியம் உடனே பேட்டரியை மாத்திருவோம் ஏன்னா ஃபோனுக்கு மூணு வயசாச்சுனு அவங்களுக்கு அவங்களே முடிவு பண்ணி மாத்திருவாங்க.
சிலர் சார்ஜ் சரியா நிக்கலைனு மாத்திருவாங்க. பேட்டரி மாத்துற அத்தனை பேரும் இது வரை அந்த பழைய பேட்டரியை மாத்துற கடையிலே விட்ருவாங்க சிலரோ கழட்டி மாட்டும் வகையில் அமைக்கபட்ட ஃபோன் மாடலில் அவங்களே பாட்டரி மாற்றி பழைய பேட்டரியை குப்பை தொட்டியில போடுவதோடு சரி.
ஆனால் இனி பழைய பேட்டரியை பவர் பாங்காக மாற்ற முடியும் என்ற ஒரு கான்செப்ட்டை உருவாக்கி இருக்கிறார் தெற்கு கொரியாவை சேர்ந்தவர். இவர் Battery Re என்னும் மாடலை உருவாக்கி உங்க பழைய பேட்டரியை இதில் சொருகினால் போதும் உங்க புது ஃபோனுக்கு தேவையான சார்ஜ் தருவது மட்டுமில்லாமல் அவசரத்துக்கு எந்த ஒரு ஃபோன் அல்லது மின்சார உபகரனங்களுக்கு உதவும் வகையில் அமைக்கபட்ட ஒரு அற்புத கண்டுபிடிப்பாகும்.
Credits to Ravi Nag.
old mobile battery as Power banks, Better Re concept up-cycling power pack, reusing smartphone batteries, palaya mobile batteriyai charge seiyyum power bankaaga maattrum pudhiya kandupidippu, new technology inventions, electronics
Social Plugin