Type Here to Get Search Results !

நீச்சல் குளத்தில் குளிப்பவர்கள் காதில் இன்பக்சன் வர என்ன காரணம்? இன்பக்சன் வராமலிருக்க என்ன செய்யலாம் ?

நீச்சல் குளத்தில் குளிப்பவர்கள் காதில் இன்பக்சன் வர என்ன காரணம்? காதில் வலி, சீழ் இன்பக்சன் வராமலிருக்க என்ன செய்யலாம் ?

கோடைகாலங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீரில் குளிக்க ஆசைப்படுவார்கள். அதற்காக பொது நீச்சல் குளங்கலிலொ அல்லது தீம் பார்க்கில்  உள்ள குளங்களிர்க்கோ சென்று கோடையை குளிர்ச்சியாக கொண்டாடுவார்கள் அனால் குளித்துமுடித்து வந்த பிறகு ஏற்ப்படும் காது வலி, காதில் சீழ் வடிதல், காது எரிச்சல் போன்ற கோளாறுகளால் வேதனை வரும்  என்பதை  எதிர்பார்த்திருக்கமாட்டர்கள், அவ்வாறு வரும் கோளாறுகளை எவ்வாறு கையாள்வது என காது, மூக்கு, தண்டை சிகிச்சை நிபுணர் Dr.Narendhran என்ன கூறுகிறார் என தெரிந்துகொள்வோம்..
kaadhu paramarippu, neechal kulathil kulippadhal varum kaadhu kolarugal, ear infection by swimming in pools, Ear pain, sevi selvam, sevi kolarugal, kadhil seel vadidhal, air plugs, cotton panchu thengai ennai, precautions before swimming pool

நீச்சல் குளத்தில் குளிப்பவர்களுக்கு காதில் இன்பக்சன் வர காரணங்கள்:

  • தண்ணீர் சுத்தமில்லாமல் இருத்தல்.
  • பல பேர் குளித்த நீச்சல் குளத்தில் குளிக்கும் பொழுது அடுத்தவர்களுக்கு இருந்த infection நம் காதினுள் செல்வதால் நமக்கும் infection வரலாம்.
  • சிலருக்கு க்ளோரின் வாட்டர்(chlorine) ஒத்துக்கொள்வதில்லை, காதினுள் செல்லும் க்ளோரின் கலந்த நீர் எரிச்சலை தர வாய்ப்புள்ளது.

மேற் குறிப்பிட்டுள்ள காரணங்களை கண்டு பயந்து நீச்சல் குளத்தில் குளிப்பதர்க்கே பயப்பட வேண்டியதில்லை, ஏனெனில் நீச்சல் குளத்திற்க்கு குளிக்க செல்லும் முன் சில முன்னெச்சரிக்கைகளை(precautions) கையாண்டால் பினால் வரப்போகும் காது வலி உபாதைகளிலிருந்து தப்பிக்கலாம்.

நீச்சல் குளத்தில் குளிப்பதால் வரும் காது வலி வராமல் தடுக்க சில வழிகள்:

ஏர் ப்ளக்ஸ்(air plugs) என கடைகளில் கிடைக்கும். குளிக்க போகும் முன் அதை வாங்கி காதில் வைத்துக்கொண்டால் தண்ணீர் உள்ளே செல்ல வாய்ப்பில்லை.

ஏர் ப்ளக்ஸ் வாங்க இயலவில்லை என்றல் என்ன செய்யலாம்?.. ஒரு எளிய வழி இருக்கிறது, காட்டன் பஞ்சை எடுத்து தேங்காய் எண்ணையில் நனைத்து குளிக்க போகும் முன் காதினுள் வைத்துக்கொண்டு குளித்து முடித்தவுடன் எடுத்து குப்பையில் எறிந்துவிடவேண்டும்.

இவ்வாறு செய்தால் காதினுள் தண்ணீர் செல்லாது, காது இன்பக்சனெ வராமல் தடுக்கலாம்.

Dr.Narendhran
ENT specialist

kaadhu paramarippu, neechal kulathil kulippadhal varum kaadhu kolarugal, ear infection by swimming in pools, Ear pain, sevi selvam, sevi kolarugal, kadhil seel vadidhal, air plugs, cotton panchu thengai ennai, precautions before swimming pool