
உணவோடு பழங்களைச் சேர்த்துக்கொள்வதே நம்மில் பலருக்குப் பழக்கம். ஆனால்,
பழங்களைத் தனி உணவாகக் கருத வேண்டும் என்கிறது நவீன மருத்துவம். பழங்களை
உணவுக்குச் சற்று முன்பு அல்லது உணவைச் சாப்பிட்டவுடன் சாப்பிடுவதைவிட,
தனித்து அதையே உணவாகக் கருதிச் சாப்பிடுவதே சிறந்த முறை. அப்போதுதான்
உணவுச் செரிமானத்தில் பிரச்சினை வராது. உணவு சாப்பிட்டதும் பழம்
சாப்பிட்டால், ஏற்கனவே இரைப்பையில் இருக்கும் உணவு செரிமானம் ஆவதற்காகக்
காத்திருக்காமல், முன்கூட்டியே இது செரிமானமாகிவிடும். அதற்குப் பிறகுதான்
உணவில் உள்ள மற்றச் சத்துகள் கிரகிக்கப்படும். இதனால் சிலருக்கு குறிப்பாக
அல்சர் உள்ளவர்களுக்கு - ஏப்பம், வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் ஏற்பட
வாய்ப்பு உள்ளது. உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்துப் பழம்
சாப்பிட்டால், இது தவிர்க்கப்படும்.
Social Plugin