Type Here to Get Search Results !

இனி, உயில் எழுத அலைவதோ, சாட்சிகளின் ஒப்புதலோ வாங்கத் தேவையில்லை. நேரத்தை மிச்சப்படுத்தும் இ-உயில் Preparing and creating will online

Preparing and creating will online with ezeewill | Making A Will Online - creating a will document online
Making A Will Online
இ-உயில்: குறைந்த செலவில் அதிக பாதுகாப்பு!

இது ஆன்லைன் யுகம். ஊருக்குப் போக ரயில் டிக்கெட் வாங்குவதில் தொடங்கி, வீட்டுக்குத் தேவையான அரிசி வாங்குவதைக் கூட ஆன்லைன் மூலமே முடித்துக் கொள்கிற காலம் இது. அந்த வகையில் ஆன்லைனில் புதிதாக நுழைந்திருக்கும் விஷயம், இ-உயில். இ-மெயில் தெரியும், அது என்ன இ-உயில் என்று கேட்கிறீர்களா?

உயில் எழுதுவதற்கு நாம் வழக்கமாக என்ன செய்வோம்? ஒரு வழக்கறிஞரைக் கொண்டு எழுதி, அதை வாசித்துத் திருத்தங்கள் செய்து, ரிஜிஸ்டர் ஆபீஸில் பதிவு செய்வோம். உயில் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்கிறோம்.

இனி எழுதப்படும் உயில்களை ரிஜிஸ்டர் ஆபீஸில் சென்று பதிவு செய்வதை விட, ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்து கொள்ளலாம். தேவைப்படும் போது திருத்தி எழுதலாம். நாமினிகள் பார்வையிடலாம் என பல வசதிகளோடு இந்த இ-உயில் சேவையைத் தொடங்கியுள்ளது என்.எஸ்.டி.எல் (National Securities Depository Limited) நிறுவனம்.

இந்த இ-உயில் எந்த அளவுக்கு நம்பகமானது, பாதுகாப்பானது அல்லது பயனுடையதாக இருக்கும் என்பது குறித்த சந்தேகம் இருக்கவே என்எஸ்டிஎல் வட்டாரங்களில் விசாரித்தோம்.

‘‘என்எஸ்டிஎல் நிறுவனம் இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் தன்னிச்சையான அமைப்பு. குறிப்பாக, இந்திய அரசின் பல்வேறு சேவைகளை இந்த அமைப்பு செய்து வருகிறது. அந்தவகையில் NSDL கொடுக்கும் இன்னொரு புதிய சேவைதான் இந்த இ-உயில். இதற்கு தனியாக இணையதளம் தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு அதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன’’ என்றனர்.

பயன்படுத்தும் முறை!

இந்தச் சேவையை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்தும் அவர்கள் சொன்னார்கள்.

‘‘உயில் எழுத விரும்புபவர், உயில் குறித்த விவரங்களைத் தெளிவாக எழுதிக் கொள்ள வேண்டும். இணையதளப் பக்கத்தில் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து, இந்த உயில் கடிதத்தை இணைக்க வேண்டும். அந்த விவரங்களுக்கு ஏற்ப ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பித்தால், அதைப் பெற்றுக் கொண்ட தற்கான மெயில் உடனடியாக வரும். இதற்கு பிறகு, இந்த விவரங்களைச் சோதித்து, உங்கள் விவரங்கள் சரியானது தானா, மாற்றங்கள் செய்ய வேண்டுமா எனக் கேட்டு NSDLலில் இருந்து ஒரு மின்னஞ்சல் வரும். இதற்கு ஒப்புதல் கொடுத்து விட்டால், உங்கள் உயில் பதிவு செய்யப்பட்டுவிடும்.

இதற்கான கட்டணம் ரூ.4,000 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்தப் பணத்தை நெட் பேங்கிங், கிரெடிட், டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம். இ-உயிலில் பதிவு செய்வதற்கு பாலினம், மதம், வசிப்பிடம், தொழில், இந்திய குடிமகன் குறித்த விவரங்களை முதலில் தரவேண்டும். பிறகு, குடும்ப உறுப்பினர்கள், உரிமையுடைய சொத்து, பொறுப்பில் உள்ள சொத்து, அதில் பாகம் உடையவர்கள் குறித்த விவரங்களையும் சொல்ல வேண்டும். இந்த விவரங்களைப் பூர்த்திசெய்த பிறகுதான் உயில் எழுத முடியும்.

உயில் எழுதி முடித்த பிறகு திருத்தப்பட வேண்டிய காப்பி அனுப்பி வைக்கப்படும். திருத்தம் இருந்தால் சரிசெய்து திருப்பி அனுப்ப வேண்டும். இதற்குபிறகு உங்களுக்கு உயில் எழுதப்பட்ட காப்பி அனுப்பி வைக்கப்படும். இது சாட்சிகள் முன்னிலையில் உயில் எழுதப்பட்டதற்கு ஒப்பானதாகக் கருதப்படும்.

இந்த உயிலை மாற்றி எழுத வேண்டுமெனில், கட்டணத்தில் 40% வரை திரும்பச் செலுத்த வேண்டும். உயில் எழுதப்பட்ட பிறகு அந்த உயிலின் ஆவணங்களைத் தவற விட்டால், மீண்டும் புதிய ஆவணங்களைக் கொடுத்து புதியதாகவே உயில் எழுத வேண்டும். தவிர, நாமினிகள் பார்வையிடும் வசதியும் உள்ளது. இதற்குத் தனியாக ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும்’’ என்றனர்.

முழுமையான பாதுகாப்பு!

தனிநபர் பயன்பாடு மட்டுமல்லாமல், நிறுவனங் களும் இந்தச் சேவையைப் பயன் படுத்திக்கொள்ள முடியும் என்கிறது NSDL. சில நிறுவனங்கள் தங்களது ரகசிய ஆவணங்களைப் பாதுகாக்க இந்தச் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

வாடிக்கையாளர்கள் கொடுத்த தகவல்கள் முற்றிலும் பாதுகாப்பாக வைக்கப்படும்.வாடிக்கையாளர் விரும்பினால் தகவல்களை மின்னஞ்சல் அல்லது அஞ்சல் மூலமாக பெற்றுக் கொள்ளும் வசதியை என்எஸ்டிஎல் அளிக்கிறது. இந்தச் சேவையைப் பெற இணையதள முகவரி : https://www.ezeewill.com  சாதாரணமாக முத்திரைத் தாள் வாங்கி அதில் உயில் எழுத வேண்டுமெனில், வழக்கறிஞர் கட்டணம் எல்லாம் சேர்த்து குறைந்தபட்சம் 20,000 ரூபாய் வரையிலும் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

இனி, உயில் எழுத அலைவதோ, சாட்சிகளின் ஒப்புதலோ வாங்கத் தேவையில்லை. நேரத்தை மிச்சப்படுத்தும் ஒரு சிறந்த சேவை இது என நம்பலாம்.

Souruce:http://senthilvayal.com

person can make his/her WILL of his/her personal properties/assets, Making A Will Online, e-will legal system available online, Preparing and creating will online is now easy with ezeewill, sothu patiram uyil eludhuvadhu, parambaraikku varisukku sothai eludhi vaikkum murai,