kanavan velaikkaari kanavu joke in tamil | vivagaratthu comedy

விசாரணைக் கூண்டில் நின்ற அப்பெண்ணிடம் குறுக்கு விசாரணை செய்யும் பொழுது வக்கீல் கேட்டார்,
"உங்கள் பெயர் என்ன?''
அந்தப் பெண் "கமலம்'' என்றாள்.
"ஏன் உங்கள் கணவரை விவாகரத்து செய்கிறீர்கள்?'' என கேட்டார் வக்கீல்,
அதற்கு அவள் "தூக்கத்தில் அவர் அடிக்கடி வேலைக்காரியின் பெயரைச் சொல்கிறார்'' என்றாள்.
"அவள் பெயர் என்ன?'' அடுத்த கேள்வியை கேட்டார் வக்கீல்.
"அவள் பெயரும் கமலம் தான்" எனப் பதிலளித்தாள்.
வக்கீலுக்கு ஆர்வம் தொற்றிக் கொள்ள சீரியஸாக கேட்டார்,
"உங்கள் பெயரும் கமலம். வேலைக்காரி பெயரும் கமலம். அப்படியிருக்க உங்கள் கணவர் தூக்கத்தில் உங்கள் பெயரையே சொல்லியிருக்கலாமல்லவா?''
அந்தப் பெண் வேகமாக தலையாட்டி மறுத்து சொன்னாள்.
"நிச்சயமாக அந்த ஆள் என் பெயரைச் சொல்லியிருக்கமாட்டார்"
இப்போது நீதிபதி குறுக்கிட்டு கேட்டார்,
"ஏன் அப்படி உறுதியாக சொல்கிறாய்?"
நீதிமன்றத்திலுள்ள அனைவரையும் ஒருமுறை பார்த்து சத்தமாக சொன்னாள்,
"ஏனென்றால் என் பெயரைச் சொல்லும் அளவுக்கு அந்தாளுக்குத் தைரியம் ஏது?''
Tamil comedy story, whatsapp joke in tamil, facebook group joke, husband, wife and lady servant joke, husband's dream about maid joke in tamil
Social Plugin