Mieko Nagaoka: 100-year-old Japanese swimmer - Guinness World Record | 100-year-old woman swims 1,500 meters in masters meet | Paatyin ulaga saadhanai
100 வயதாகும் மீகோ நாகாவோகா 1914-ம் ஆண்டு பிறந்தவர். ஜப்பான் நாட்டின் பாரம்பரிய நடனக்கலையான 'நோ'-வை நாடக மேடைகளில் காட்சிப்படுத்துவதே அவரது வேலையாக இருந்தது. கால்மூட்டில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்தபிறகு தனது 82-வது வயதில் நீந்த துவங்கினார். கால்மூட்டில் ஏற்பட்ட காயம் குணமாக உடற்பயிற்சி செய்யவே அவர் நீச்சல் குளத்திற்கு வர ஆரம்பித்தார். 82-வது வயதில் நீச்சல் அடிக்க கற்றுக்கொண்டார்.
இந்நிலையில், ஆர்வம் துளிர்விடவே சீக்கிரமே பிரபல நீச்சல் போட்டிகளிலும் பங்குபெற துவங்கினார். 84-வது வயதில் நாகாவோகா ஜப்பானில் நடக்கும் மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டார். 88-வது வயதில் 2002-ம் ஆண்டு நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த மாஸ்டர்ஸ் வேர்ல்டு சாம்பியன்ஷிப் போட்டியில் முதல்முறையாக 50 மீட்டர் பின்புற நீச்சல் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்று தேர்ச்சி பெற்றார். அதற்கு பிறகு, அதே போட்டிகள் 2004-ம் ஆம் ஆண்டு இத்தாலியில் நடந்த போதும் 3 வெள்ளி பதக்கங்களை வென்று உலகத்தையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். (50 மீ, 100மீ மற்றும் 200 மீ பேக்ஸ்ட்ரோக்). 90-வது வயதில் ஜப்பானின் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் அதிக சாதனை புரிந்தவராக உலகம் முழுவதும் அறியப்பட்டார். 800 மீட்டர் ஃப்ரீஸ்டைலில் தேசிய சாதனைகளையும் நிகழ்த்தியிருந்தார்.
திடீரென்று நீச்சல் விளையாட்டுக்குள் வந்த அவர், தனது திறமைகளை மெருகேற்றி புதிய சாதனைகளை முறியடிப்பதற்காக தனியாக பயிற்சியாளர்கள் உதவியுடன் நீச்சல் போட்டியின் நுணுக்கங்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அவரது உழைப்பிற்கு பலனாக 95-வது வயதில் 50 மீ்ட்டர் பேக்ஸ்டுரோக்கில் உலக சாதனையை நிகழ்த்திக்காட்டினார்.
தற்போது வரை 24 உலக சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் 100 வயது நாகாவோகா இன்னும் அதிக பதக்கங்களையும் சாதனைகளையும் வெல்ல ஆவலுடன் தயாராகி வருகிறார் என்பது ஆச்சர்யமே! சாதனைகள் செய்வதற்கு வயது ஒன்றும் தடையில்லை..
Social Plugin