Type Here to Get Search Results !

வாயுத் தொல்லை ஏற்படாமல் இருக்க 13 வழிகள்!

0

Vaivu thollai erppadaamal irukka 13 vazhigal..!! - vaayu thollai

வாயுத் தொல்லை குறைக்க 13 வழிகள்!

பால் பொருட்களில் கவனம் தேவை(Lower milk products): பால் பொருட்களை எப்போதும் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிக மானால், அதுவே வாய்வுத் தொல்லையை உண்டாக்கும். அதிலும் தயிரில் உள்ள புரோபயோடிக்ஸ் அதிக அளவு வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும்.

Vaivu thollai erppadaamal irukka 13 vazhigal..!! - vaayu thollai, fart problem solution, health tips in tamilமூலிகை தேநீர்(Drink Herbal Tea): வாய்வுத் தொல்லை அதிகம் இருந்தால், மூலிகைத் தேநீரை குடி யுங்கள். இது வாய்வுத் தொல்லை யில் இருந்து நிவாரணம் தரும். அதிலும் இஞ்சி, பட்டை போன்றவை சேர்க்ப்பட்ட தேநீரைப் பருகினால், செரிமான பாதையில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, செரிமானம் சீராக நடை பெற்று, வாய்வுத் தொல்லை ஏற்படாமல் தடுக்கும்.

கொழுப்புள்ள உணவுகள்(No Fat foods): கொழுப்பு க்கள் நிறைந்த உணவை உட்கொண்டால், செரிமானம் மெதுவாக நடை பெற்று, உணவு செரிக்க நீண்ட நேரம் ஆகும். இப்படி நீண்ட நேரம் ஆவதால், வயிற்றில் வாய்வுத் தொல்லையும் அதிகரிக்கும். ஆகவே வாய்வு தொல்லையைத் தடுக்க, கொழுப்புக்கள் நிறைந்த உணவை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

வாய்வுத் தொல்லையை உண்டாக்கும் உணவுகள்(Avoid foods that cause Gas problem): உருளைக் கிழங்கு, பீன்ஸ், பருப்புகள், முள்ளங்கி, முட்டைக் கோஸ் போன்ற காய்கறிகள் வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும். ஆகவே இந்த காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வதைத் தவிர்த்தால், வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபட லாம்.

கார்பனேட்டட் பானங்கள்(Don't take Carbonated Drinks): கார்பனேட்டர் பானங்களை குடிக்கும் போது, அவை கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றி, அது வயிற்றில் செல்லும் போது வாயுவாக மாறும். அதிலும் இதனை தொடர்ந்து குடித்து வந்தால், வாய்வுத் தொல்லை ஏற்படுவதோடு, இன்னும் தீவிரமான சில பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.

புகைப்பிடிப்பதை தவிர்க்கவும்(Quit Smoking): புகைப்பிடிக்கும் போது, புகையை உள்ளி ழுப்பதால், புகைப் பிடிப்போருக்கு வாய்வுத் தொல்லை அதிக அளவில் இருக்கும். மேலும் இத்தகையவர்களுக்கு வயிறு உப்புசமாக இருக்கும். ஆகவே புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.

சூயிங் கம் வேண்டாம்(Avoid Chewing gum): நிறைய மக்களுக்கு எப்போதும் சூயிங் கம்மை வாயில் போட்டு மென்று கொண்டே பேசும் பழக்கம் உள்ளது. இப்படி சூயிங் கம்மை மென்று கொண்டே இருந்தால், வாயின் வழியாக உடலினுள் காற்று புகுந்துவிடும். இதனால் வயிற்றில் வாயு அதிகம் சேர்ந்து அடிக்கடி இடத்தை நாற வைக்க வேண்டி வரும்.

உணவுக்கு முன் நீர்(Drink water Half an hour early before taking food): ஒவ்வொரு முறை உணவு உண்ணும் அரைமணி நேரத்திற்கு முன்பு, குறைந்தது 1 கப் தண்ணீரைக் குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதால், செரிமான பாதையில் எவ்வித இடையூறும் இல்லாமல் உணவு சென்று செரிமானமடையும். இதனால் வாய்வுத் தொல்லை ஏற்படுவது குறையும்.

பேசிக்கொண்டே சாப்பிட வேண்டாம்(Don't Talk while taking food):  நம் முன்னோர்கள் சாப்பிடும் போது பேசக்கூடாது என்று சொல்வார்கள். காரணமின்றி அவர்கள் எதுவும் சொல்லவில்லை. ஏனெனில் சாப்பிடும் போது பேசுவதால், உணவுடன் சேர்ந்து காற்றும் வயிற்றினுள் செல்கிறது. இதனால் வாய்வுத் தொல்லை ஏற்படுகிறது. ஆகவே பேசிக்கொண்டே சாப்பிடும் பழக்கத்தை கைவிட்டால் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

வேகமாக சாப்பிடாதீர்கள்(Eat slow): சிலர் உணவை தட்டில் வைத்த 2 நிமிடத்தில் தட்டை காலி செய்துவிடுவார்கள். இப்படி வேகமாக சாப்பிட்டால், உணவை வேகமாக விழுங்கும் போது காற்றையும் அதிக அளவில் உள்ளிழுக்க நேரிட்டு, வாய்வுத் தொல்லை ஏற்படும். ஆகவே உணவை உட்கொள்ளும் போது, உண்ணும் உணவை ரசித்து மெதுவாக உட்கொள்ள வேண்டும்.

வாயை மூடி மென்று சாப்பிடவும்: வாயினுள் உணவை வைத்ததும் வையை மூடிக்கொண்டு மெல்ல வேண்டும் இதனால் வாயினுள் தேவையில்லாமல் செல்லும் காற்று தடை பட்டு வாயு தொல்லை குறையும்.

மிக முக்கியம்: மலசிக்கல் இல்லாமல் இருப்பது -  மலசிக்கல் வாயு தொல்லை வர முக்கிய காரணமாக அமைகிறது. மலசிக்கல் இருந்தால் இனிமா கொடுத்து கட்டியுள்ள மலத்தை வெளியேற்றலாம் அல்லது இயற்க்கை முறையில் கிடைக்கும் மலமிலக்கியை எடுத்துகொண்டால் மலம் எளிதாக வெளியேறும்.

Vaivu thollai erppadaamal irukka 13 vazhigal..!! - vaayu thollai, வாயுத் தொல்லை ஏற்படாமல் இருக்க 13 வழிகள், Gastric trouble, Gastric problem, Tips to cure gas problem, Fart problem solution, ways to stop fart, Foods to avoid for fart trouble

கருத்துரையிடுக

0 கருத்துகள்