Type Here to Get Search Results !

பிறந்த குழந்தைகளின் தொப்புள் கொடியை பராமரிப்பது எப்படி..??

0

Taking care of your baby's umbilical cord | pirandha kulandhaiyin Thoppul kodi paramarippu muraigal

pirandha kulandhaiyin Thoppul kodi paramarippu muraigal தாயின் வயிற்றில் வளரும் குழந்தைகள், ஊட்டச் சத்துக்களையும் ஆரோக்கியத்தையும் தாயின் கர்ப்பப் பையுடன் இணைந்திருக்கும் நஞ்சுக் கொடி மூலமாக பெறுவார்கள். 

குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடி இடுக்கி இடப்பட்டு, குழந்தையின் உடம்பில் இருந்து எவ்வளவு தூரம் வெட்ட முடியுமோ, அவ்வளவு தூரம் வலி யெடுக்காமல் மருத்துவர்கள் வெட்டி விடுவார்கள். தொப்புள் கொடி இருந்த இடத்தில் ஒரு துண்டித்த உறுப்பு மட்டுமே இருக்கும். அதுவும் மூன்று வார காலத்திற்குள் உதிர்ந்து விடும். குழந்தையின் தொப்புள் கொடியை கீழ் வழங்கியுள்ள சில குறிப்பிட்ட வழிமுறைகளால் பராமரிக்க முடியும். சொல்லப் போனால், குழந்தையின் தொப்புள் கொடி மீது மிகுந்த முக்கியத் துவத்தை அளிக்க வேண்டும்.

தொப்புள் கொடியை சுத்தம் செய்யுங்கள்:  தொப்புள் கொடி முழுமையாக உதிர்ந்து, அது ஆறும் வரை குழந்தையை குளிப்பாட்ட சிலர் தயங்குவார்கள். தொப்புள் கொடியை சுத்தம் செய்ய, ஸ்பான்ஞ் ஒன்றை தண்ணீரில் முக்கி, கொடியை மென்மையாக சுத்தம் செய்யுங்கள். பின் பஞ்சு ருண்டையை கொண்டு அதனை துடைத்து எடுங்கள். அதனை ஈரம் படாமல் பார்த்துக் கொண்டால், குழந்தையின் தொப்புள் கொடி பராமரிப்பு மிகவும் சுலபமாகி விடும்.

ஆடைகள்:  குழந்தைக்கு வசதியாக உள்ள மற்றும் லூசான ஆடை களையே அணியுங்கள். டையப்பர் அணிவித்தால் அது தொப்புள் கொடிக்கு கீழே வருமாறு கட்டுங்கள். தொப்புள் கொடி உலர்ந்து வரும் வேளையில் சில குழந்தைகளுக்கு இரத்தம் வெளி யேறுவது இயல்பான ஒன்று தான். அந்த மாதிரி நேரத்தில் கையோடு மாற்றுத் துணிகளை வைத்துக் கொள்ளுங்கள். குழந்தையின் தொப்புள் கொடி பராமரிப்பில் இது முக்கிய பங்கை வகிக்கிறது.

துண்டித்த உறுப்பு தானாக உதிரட்டும்: தொப்புள் கொடி தானாக உதிர்வதற்காக தான் குளியல், சுத்தப்படுத்துதல் மற்றும் ஆடை அணிவித்தல் ஆகியவைகள் பரிந்துரைக்கப் படுகிறது. மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் உள்ள தொப்புள் கொடி பழுப்பு நிறத்திக்கு மாறும். பின் உதிர் வதற்கு முன்பு கருப்பு நிறத்திக்கு மாறும். தனியாக தொங்கி கொண்டி ருந்தாலும் கூட அதனை நீங்களாக பிய்த்து விடாதீர்கள்.

 தொற்றுக்களும் அதை தடுப்பதற்கான வழிகளும்:  பொதுவாக இது ஆறுவதற்கு 3 வாரங்களாவது ஆகும். இந்த கால கட்டத்தில் தொப்புள்கொடியின் அருகில் வறண்ட இரத்தத்தை காணலாம். குழந்தைக்கு காய்ச்சல் வந்தாலோ அல்லது தொப்புள் கொடி சீக்கிரமாகவே புடுங்கப் பட்டு அதனால் இரத்தக் கசிவு ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்

 சில நேரம் சிறிய சிவப்பு நிற வடுக்களை தொப்புள்கொடி உண்டாக்கும். இதனால் மஞ்சள் நிறத்திலுள்ள திரவம் வெளி யேறும். இது தானாகவே ஒரு வாரத்திற்குள் சரியாகி விடுவதால், இதற்கு பொதுவாக எந்த ஒரு மருத்துவ உதவியும் தேவை யில்லை. ஆனால் அது குணமாக வில்லை என்றால், இந்த வடுவை நீக்க மருத்துவரை அணுக வேண்டும். தொப்புள்கொடி பராமரிப்பில் இதுவும் முக்கிய பங்கை வகிக்கிறது.

இது www.tamil247.info பதிவல்ல.. Taking care of your baby's umbilical cord | pirandha kulandhaiyin Thoppul kodi paramarippu muraigal #parentingtips #kulandhaivalarppu #healthtipsintamil #thoppulkodi #umbilicalcord பிறந்த குழந்தைகளின் தொப்புள் கொடியை பராமரிப்பது எப்படி..??

கருத்துரையிடுக

0 கருத்துகள்