Type Here to Get Search Results !

[சமையல்] பருப்பு ரசம் | Paruppu Rasam recipe

parauppu rasam recipe

பருப்பு ரசம் | Paruppu Rasam recipe  
தேவையான பொருட்கள்:

1. தக்காளி - 1 (பெரியது மற்றும் நறுக்கியது)
2. பச்சை மிளகாய் - 1
3. துவரம் பருப்பு - 1/2 கப் (வேக வைத்து லேசாக மசித்தது)
4. புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
5. பூண்டு - 5 பற்கள்
6. ரசப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
7. உப்பு - தேவையான அளவு
8. சர்க்கரை - 1 டீஸ்பூன்
9. கொத்தமல்லி - சிறிது

தாளிப்பதற்கு... 

10. எண்ணெய் - 1 டீஸ்பூன்
11. கடுகு - 1 டீஸ்பூன்
12. சீரகம் - 1 டீஸ்பூன்
13. கறிவேப்பிலை - சிறிது
14. பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
15. வரமிளகாய் - 1

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத் துள்ள பொருட்களை ஒவ் வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விடவேண்டும். பின்பு அதில் உப்பு, சர்க்கரை மற்றும் ரசப் பொடி சேர்த்து நன்கு கிளறி, பின் அதில் தண்ணீர், புளிச் சாறு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு, அதில் கொத்த மல்லியை தூவி இறக்கினால், பருப்பு ரசம் ரெடி!!!

Image Courtesy: yummytummyaarthi
Paruppu rasam samayal seimurai, dhal rasam, rasam recipes, arokiya samayal