Type Here to Get Search Results !

வாகனம் ஓட்டுபவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய குறிப்புகள்..!

0

A Guide for car / two wheeler Owners | Safe Car driving Tips | Safe Bike driving Tips

A Guide for car / two wheeler Owners | Safe Car driving Tips | Safe Bike driving Tips
வாகனம் ஓட்டுபவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய குறிப்புகள்..!

* வாகனம் ஓட்டும் போது ஆர்.சி.புத்தகம்(RC book), இன்ஸ்சூரன்ஸ்(insurance) உங்கள் ஓட்டுனர் உரிமை அடையாள அட்டை( Driving Licence) ஆகியவற்றின் பிரதிகள்(xerox) கையில் இருக்க வேண்டும்.
 * வாகனம் ஓட்டுவது மறக்காமல் இருக்க எப்போதெல்லாம் முடிகிறதோ, அப்போதெல்லாம் வண்டியை ஓட்டிப்பார்ப்பதும் அடிக்கடி கார்(car) அல்லது டூவீலர்(two wheeler)
 *  காராக இருந்தால் சீட் பெல்ட்டும்(seat belt), டூ-வீலராக இருந்தால் ஹெல்மெட்டும்(helmet) அணிவது அவசியம்.
 * வாகனத்தை எடுப்பதற்கு முன்பு எரி பொருள்(petrol/diesel) இருக்கிறதா, டயர்(tyre) நல்ல நிலையில் இருக்கிறதா, பிரேக்(brake) பிடிக்கிறதா என சரிபார்ப்பது மிகவும் அவசியம்.
 * தனியே வாகனம் ஓட்டிச்செல்லும்போது கண்டிப்பாக செல்போனை எடுத்துச் செல்லவும். அது சார்ஜ் செய்யப் பட்டிருக்கிறதா என சரிபார்க்கவும்.
 * புதிதாக ஓர் இடத்துக்கு வாகனத்தை ஓட்டிச் செல்வதானால் பாதுகாப்பான வழியைத் தெரிந்து செல்வது நல்லது.
 * அறிமுகமில்லாத யாருக்கும் லிஃப்ட்(lift) தர வேண்டாம்.
 * வாகனம் பழுதனால் அந்த இடத்துக்கே வந்து சரி செய்து கொடுக்கும் மெக்கானிக்கின் செல் அல்லது சர்வீஸ் சென்டர் செல் நம்பர்களை எப்போதும் உங்கள் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
 * வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும்போது உங்கள் கவனத்தை சிதறடிக்கும் விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். உதாரணத்துக்கு வழி கேட்பவர்கள், சிக்னலில் பொருள்கள் விற்பவர்கள்..
 * உங்கள் காரில் தானாகவே பூட்டிக் கொள்ளும் கதவு(automatic door lock) வசதி இருப்பினும் நீங்களும் ஒரு முறை சரிபார்க்கவும்.
 * கண்ட கண்ட இடங்களில் உங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டுப் போக வேண்டாம். வண்டியை பார்க் செய்யும் போது எக்காரணம் கொண்டும் செல் ஃபோனில் பேசுவதைத் தவிருங்கள். வண்டியைப் பூட்டி, சாவி உங்கள் கைகளில் இருப்பதை உறுதி செய்த பிறகு தான் அந்த இடத்தை விட்டு நகர வேண்டும்.
 * வண்டி ஓட்டும் போது செல் ஃபோனில் பேசுவதை கட்டாயம் தவிர்க்கவும். எத்தனை அவசரமான அழைப்பாக இருந்தாலும் பாதுகாப்பான ஓர் இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டுப் பேசுவதே நல்லது.
 * குடும்பத்துடன் உல்லாசப் பயணம் போகும் முன்னர் உங்கள் வாகனம் இயல்பு நிலையில் இருக்கிறதா? என்று கார் மெக்கானிக்கிடம் கொடுத்து செக் செய்ய மறவாதீர்கள்.
 * முறையான உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டுவது எப்படி சட்டப்படி தவறானதோ அதே போன்றது தான் காலாவதி(expired) ஆன உரிமத்தை வைத்திருப்பதும். 20 ஆண்டுள் முடிந்த பிறகு 40வயது வரையிலும் அடுத்து 50 வயது வரையிலும் உரிமம் புதுப்பிக்கப்படும்(renew). அடுத்தடுத்து 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.
A Guide for car / two wheeler Owners | Car driving Tips | Bike driving Tips, Car ottunar kurippugal, Driving tips in tamil, Vaganam ottubavargal, vaaganam, petrol saving tips, safe driving tips, safe car parking tips, don't use cellphone while driving, automatic door lock, car service before long travel, best traveling advice for drivers, automobile advice, vehicle owner guide

கருத்துரையிடுக

0 கருத்துகள்