Type Here to Get Search Results !

பாஸ்ட்ஃபுட் கடைகளில் வேலை செய்தவர் சொன்ன பகிரங்க தகவல்கள்..!!

0
Fast foos unhealthy food preparation process, fried rice, chilli chicken
பாஸ்ட்ஃபுட் கடைகளில் வேலை செய்தவர் சொன்ன அதிர்ச்சி தகவல்கள்..!!

* சிக்கன்: பாஸ்ட்ஃபுட் கடைகள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப் படுத்துவதில்லை. இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனைத்தான் அதிகமாக உபயோகிக்கி றோம். அதை வினிகரில் கழுவி உபயோகிக்கும் போது அந்தக் கெட்டுப் போன வாடையை வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ளமுடியாது.

* சிக்கன் ரைஸ்: சிக்கன் ரைஸ் செய்யும் போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிவப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை உபயோகிக்கிறோம். ஆனால், அது ஒரு தடை செய்யப்பட்ட பொருள். அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்தச் சிவப்பு சாயம் உங்கள் கையில் இரண்டு நாள்களுக்கு இருக்கும். அது உங்கள் வயிற்றுக்குள் போனால்?

* சோயா சாஸ்: இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே உபயோகிப்பதில்லை. மாறாக தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் உபயோகித்த எண்ணெயையோ கலந்து செய்கிறோம்.

* பாமாயில்: ரைஸ் கடாயில் உபயோகிக்கும்போது சோறு கடாயில் ஒட்டக்கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை அதில் கொட்டுகிறோம்.

* கழுவாத கடாய்: இன்னொன்று சொன்னா நம்ப மாட்டிங்க... அந்த ரைஸ் போட்டு கிண்டும் கடாயியை நாங்கள் ஒரு வாரத்திற்கு கழுவ மாட்டோம். காரணம் அதில் உள்ள எண்ணெய்ப்பசை போகக் கூடாது என்பதற்காக. நாங்கள் கழுவி எண்ணெய்ப் பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்டாகிவிடும்.

* அஜினமோட்டோ: இதை அதிகமாக உபயோகிக்கிறோம். அது உடலுக்குக் கேடு உண்டாக்கும் பொருள். இதை தொட்டு உங்கள் நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்துவிடும். சோதித்துப் பாருங்கள்.

* சில்லி சாஸ்: அத கிட்டபோய் முகர்ந்து பார்த்தால் முகம் சுளிக்கிற அளவுக்கு கெட்ட வாடை அடிக்கும்.

நன்றி: Source fast food shops and awareness group.

தகவல் :- ஏ.எஸ்.பிலால்,சென்னை.


Fast foos unhealthy food preparation process, Fast food nalladhu illai, palaya chicken vinegar, soya sauce, chilli sauce, bad preparation of fast foods, excess Palm oil, thuridha unavugal saappiduvadhal erppadum kedugal, Fried rice, ajinomotto, kaluvaadha kadai,

கருத்துரையிடுக

0 கருத்துகள்