kanchipuram idli seimurai | kanchipuram idli recipe in tamil
காஞ்சீபுரம் இட்லி செய்ய தேவையான பொருட்கள்....
1. பச்சரிசி - 1 கப்
2. புழுங்கலரிசி - 1 கப்
3. உருண்டை உளுந்தம்பருப்பு - ஒரு கப்
4. கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
5. கடுகு, உளுந்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
6. சீரகம் - 1 டீஸ்பூன்
7. மிளகு - ஒரு டீஸ்பூன்
8. இஞ்சி - சிறு துண்டு
9. ஆப்பசோடா - ஒரு சிட்டிகை
10. தேங்காய்ப்பூ - 2 டேபிள் ஸ்பூன்
11. பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
12. நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
காஞ்சீபுரம் இட்லி செய்முறை:
* அரிசி, முழு உளுத்தம் பருப்பை ஒன்றாக ஊற வைத்து கொரகொரப்பாக அரைத்து உப்பு போட்டு கரைத்து வைக்கவும், மாவு பொங்கியது ம் ஆப்ப சோடா சேர்த்து கலக்கவும், அத்துடன் நல்லெண்ணெ யை காய்ச்சி ஊற்றவும்.
* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து பொன்னிறமானதும், மிளகு, சீரகத்தை உடைத்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.
* இத்துடன் இஞ்சியை பொடியாக துருவி சேர்த்து, கறிவேப்பி லை தேங்காய்ப் பூ சேர்த்து நன்றாக வதக்கி மாவில் சேர்க்கவும்.
* நன்றாக கலந்து அகலமான கிண்ணத்தி ல் எண்ணெய் தடவி மாவை முக்கால் பங்கு வருமாறு ஊற்றி குக்கரி ல் வைத்து குக்கர் வெயிட் போடாமல் வேக வைக்கவும்.
* காஞ்சீபுரம் இட்லி ரெடி.
kanchipuram idli seimurai | kanchipuram idli recipe in tamil, காஞ்சீபுரம் இட்லி, vidha vidhamaana idli seiyum murai, pudhu vidha idli, idli vagaigal, tamil recipes, cooking food in tamil, samayal muraigal, kaalai unavu, morning food in tamilnadu, best morning snacks
Social Plugin