Type Here to Get Search Results !

தயிர்: 20 சத்தான தகவல்கள்...

0

20 Healthy facts about Curd...

தயிர்(Curd) : 20 சுவையான தகவல்கள்...

1. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகி விடும்.

Thayir nanmaigal, thayirinn 20 payangal, iyarkkai unavu2. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்க ம் நன்றாக வரும்.

3. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர் தான்.

4. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.

5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால் தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

7. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

8. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.

10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

11. மெனோபாஸ் பருவத்தை எட்டப் போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோக மாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

12. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவு வகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் 'ரயித்தா' சாப்பிடுகிறோம்.

13. புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.

14. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.

15. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.

16. தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.

17. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.

18. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

19. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.

20. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.


Thayir nanmaigal, thayirinn 20 payangal, thayir sappittal jeeranam sariyaagum, thayir, paal unavugal, Thayir Saadam, Thayir soru, thayirin 20 nanmaigal, 20 facts about Curd, #curdrise, #curd, #iyarkkaiunavu #iyrkkai தயிர்: 20 சத்தான தகவல்கள், thagavlgal, satthunavu, poopeidhum pengalukku calcium tharum unavu

கருத்துரையிடுக

0 கருத்துகள்