Type Here to Get Search Results !

[சமையல்] சுண்டல் வகைகள் No.1: வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்

சுவையான சுண்டல் வகைகள்: வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்..

தேவையான பொருட்கள்: 
  1. வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப்
  2. இஞ்சி - ஒரு சிறிய துண்டு 
  3. பச்சை மிளகாய் - 2 
  4. தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் 
  5. பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன் 
  6. கடுகு, உளுந்து, பெருங்காயம் - தலா அரை டீஸ்பூன்
  7. உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை விளக்கம்: 

vellai kondakadalai sundal recipes, samayal seimurai
கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேகவிடவும். இஞ்சி, பச்சை மிளகாயை ஒன்றிரண்டாக நசுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி... வெந்த கொண்டைக்கடலை, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

vellai kondakadalai sundal recipes, samayal seimurai, sundal seimurai, tamil recipes, Home cooking recipes, veettu samayal, Channa Sundal, thaliccha sundal