Type Here to Get Search Results !

சிகரம் தொடு சினிமா விமர்சனம் | Sigaram Thodu Review

0

சிகரம் தொடு திரை விமர்சனம்..  

நடிகர்: விக்ரம் பிரபு
நடிகை: மோனல் கஜ்ஜார்
இயக்குனர்: கவுரவ்
இசை: டி.இமான்
ஒளிப்பதிவு:  கோபிநாத்
இதர நடிகர்கள்: K. S. ரவிக்குமார், சதீஷ், ஈரோடு மகேஷ், கௌரவ்  நாராயணன், கோவை சரளா 
Release date: 12 Sep 2014

"சிகரம் தொடு"

இப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு, நடிகை மோனல் கஜ்ஜார், டைரக்டர் கவுரவ் இதனை டைரக்ட் செய்கிறார். யுடிவி மோசன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது, மற்றும் இசை டி.இமான் இசையமைத்திருக்கிறார். இது ஒரு மாடர்ன் தந்தைக்கும் மகனுக்குமான உறவை சொல்லும் படம்.

கும்கி படத்தில் வெற்றி நாயகனாக அறிமுகமாகிய விக்ரம் பிரபுவிற்கு அடுத்து  வந்த இரு படங்களில் கும்கிக்கு கிடைத்த வரவேப்பு கிடைக்காத வேளையில் இப்பொழுது, வெளிவந்திருக்கும் சிகரம் தொடு படத்தில்  போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார்.

முரளி பாண்டியன் (விக்ரம் பிரபு) ஒரு வங்கி வேலை வேண்டும் என்று விரும்புகிறார். நல்ல வேலை வாங்க வங்கியில் வேலை செய்பவர்களை ஐஸ் வைத்துக்கொண்டு அலைகிறார். நாயகன் விரும்புவதெல்லாம் அமைதியான வாழ்க்கை.

ஆனால் நாயகனின் தந்தை செல்லப்பா (சத்யராஜ்) ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். காவலராக பணியாற்றும் சத்யராஜ் ஒரு கலவரத்தின் போது கால்களை இழந்து விடுகிறார். அதன் பிறகு காவல்துறையின் சிஆர்பி பிரிவில் பணியில் சேருகிறார். அவரை போல தன் பையன் ஒரு காவல்துறையில் சேர்ந்து சாதனை படைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் விக்ரம் பிரபுவோ ஏசி அறையில் உட்கார்ந்து வேலை பார்க்கும் பேங்க் மேனேஜர் வேலைக்கு குறி வைக்கிறார்.

இந்நிலையில் மோனல் கஜ்ஜரை சந்திக்கிறார் விக்ரம் பிரபு. தனக்கு கணவராக வரப்போகிறவர் காவல்துறையில் மட்டும் இருந்திரவே கூடாது என்ற கொள்கையுடன் இருக்கும் மோனலுக்கும் விக்ரம் பிரபுவுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிடுகிறது. மோனலிடம் பேங்க் மேனேஜர் டிரைனிங்க்கு சிம்லா போகிறேன் என்று சொல்லிக் கொண்டு சென்னைக்கு போலீஸ் டிரைனிங்குப் போகிறார் விக்ரம் பிரபு. அப்பா தன் மகன் போலீஸில் சேர வேண்டும் என்று ஆசைப்பட காதலியோ அந்த வேலை வேண்டாம் என்று சொல்ல… கடைசியில்  நாயகன் தந்தையுடைய ஆசையாய் நிறைவேற்றுகிறாரா இல்லையா..??  இப்படியாக மொத்த படம் இந்த கதையை சுற்றி அமைகிறது.

சிகரம் தொடு படத்தின் முதல் பாகம் விறுவிறுப்பாக செல்கிறது. அதிலும் குறிப்பாக இடைவேளைக்கு முன் 20 நிமிட காட்சியை சொல்லலாம்.

இடையில் ஏடிஎம் கார்டில் ஆட்டயப் போடும் கும்பலின் கதையையும் செருகி இருக்கிறார் இயக்குனர் கௌரவ்,  படத்தில் நடைபெறும் ATM கொள்ளை, ID திருட்டு, கிரடிட் கார்டு/ டெபிட் கார்ட் மோசடி காட்சிகளை பிரமாதமாக கையாண்டுள்ளார்.

சிகரம் தொடு மொத்தத்தில் மனதில் பதிகிற படம், அனைவரும் பார்க்கவேண்டிய படம். எந்த எத்ர்பார்ப்பும் இல்லாமல் படம்பார்க்க செல்பவர்களை திருப்தியடைய செய்யும் படமாக உள்ளது..
Rating: 3.5/5

Official Trailer:



Sigaram Thodu Tamil Movie Review, trailer
Sigaram Thodu Tamil Movie Review, tamil cinema vimarsanam, Sigaram Thodu review online, 12th Sep 2014 release movie Sigaram Thodu, Vikram Prabhu's 'Sigaram Thodu', trailer, teaser, சிகரம் தொடு கதை, சிகரம் தொடு வசூல் நிலவரம், songs review, performance, acting, stroy, comedy, stunt, screen play, editing, sound effect, direction reviews, vimarshanam, kadhai, ATM fraud, credit debit card fraud scenes, bank manager post for actor vikram prabhu

கருத்துரையிடுக

0 கருத்துகள்