Type Here to Get Search Results !

[சமையல்] சிறுதானிய சமையல்: சாமை சாம்பார் சாதம் (Samai Sambar Rice: siruthaniya recipes)

தேவையானவை சமையல் பொருட்கள்: 
  1. சாமை அரிசி  4 கப்
  2. பீன்ஸ், காரட்  250 கிராம்
  3. கத்திரிக்காய், தக்காளி  தலா 50 கிராம்
  4. காய்ந்த மிளகாய்  8
  5. துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு  தலா ஒரு கப்
  6. சின்ன வெங்காயம்  10
  7. முருங்கைக்காய்  2
  8. உப்பு, கடுகு, மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை  தேவையான அளவு
  9. சாம்பார் பொடி, நெய், சீரகத்தூள், பெருங்காயத்தூள், நல்லெண்ணெய்  சிறிதளவு.
சாமை சாம்பார் சாதம் செய்முறை விளக்கம்: 
samayal seimurai, Tamil Cooking recipes, siruthaniya recipes
சாமை அரிசியை தண்ணீரில் கழுவி ஊறவைக்கவும். துவரம் பருப்பை மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேகவிடவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துப் பொரித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறிகளை நறுக்கிச் சேர்க்கவும். 

காய்கள் நன்கு வெந்ததும், வேகவைத்த பருப்பைச் சேர்த்து, சிறிது புளிக் கரைசலை விட்டுக் கொதிக்கவிடவும். ஊறவைத்த சாமை அரிசியைக் கொட்டி உப்பு சேர்த்துக் கிளறவும். ஏழரை கப் தண்ணீர்  சேர்த்து பெருங்காயத்தூள், சாம்பார் பொடி சேர்த்து நன்கு கிளறவும். 

அரிசி வெந்ததும், நெய் ஊற்றிக் கிளறிவிடவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை, சீரகத்தூள் தூவிப் பரிமாறவும்.

சாமை உணவின் பலன்கள்:  இயற்க்கை உணவான சாமை உடல் அசதி மற்றும் தளர்ச்சியைப் போக்கி சுறுசுறுப்பைத் தரும். எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். தொடர்ந்து சாப்பிட்டால், முதுகெலும்பு பலப்படும். குறிப்பாக, இரு சக்கர வாகனங்களில் அடிக்கடி பயணம் செய்வதால் ஏற்படும் முதுகுவலி குறையும்.
சிறுதானிய சமையல்: சாமை சாம்பார் சாதம் (Samai Sambar Rice: siruthaniya recipes), Samayal seimurai, Tamil Cooking recipes, siruthaniya recipes, iyarkai unavugal, சமையல்