Type Here to Get Search Results !

[சமையல்] சிறுதானிய சமையல்: குதிரைவாலி பிரியாணி (kuthiraivali biryani: siruthaniya recipes)

தேவையானவை சமையல் பொருட்கள்:

  1.  குதிரைவாலி அரிசி  4 கப்,
  2.  பீன்ஸ், கேரட் 300 கிராம்,
  3.  காலிஃப்ளவர், வெங்காயம், தக்காளி தலா 100 கிராம்,
  4.  பூண்டு 5 பல்,
  5. இஞ்சி ஒரு துண்டு,
  6. கொத்தமல்லித்தழை, புதினா, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள்  சிறிதளவு,
  7. லவங்கம், ஏலக்காய், கிராம்பு, நெய், எண்ணெய், உப்பு தேவையான அளவு.

செய்முறை விளக்கம்:
kudhiraivaali briyani, sarkkarai noikku sirandha unavu, mala sikkal theera iyarkai unavugal

குதிரைவாலி அரிசியை கழுவி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

பீன்ஸ், கேரட், வெங்காயம், காலிஃப்ளவர், தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு, ஏலக்காய், லவங்கப்பட்டை சேர்த்து, பிறகு, வெங்காயம், பூண்டு, இஞ்சி கலவை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து காய்கறிகளைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பிறகு அதில், அரிசியைக் கொட்டி கிளறி ஏழரை கப் தண்ணீர் சேர்த்து கொத்த மல்லி, புதினா சேர்த்து கிளறி குக்கரை மூடவும். மூன்று விசில் வந்ததும், குக்கரை இறக்கி நெய் ஊற்றிக் கிளறிப் பரிமாறவும்.


பலன்கள்: குதிரைவாலியில் நார்ச்சத்து அதிகம். இது மலச் சிக்கலைத் தடுத்து, கொழுப்பைக் குறைக்கும்.  ரத்தத்தில் சர்க்கரை அளவு மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சக்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.  சிறுதானிய சமையல்: குதிரைவாலி பிரியாணி (kuthiraivali biryani: siruthaniya recipes), kudhiraivaali briyani, sarkkarai noikku sirandha unavu, mala sikkal theera iyarkai unavugal, idhaya noi theera siruthaniya unavugal