பிள்ளைகள் ஏன் பொய் பேசுகிறார்கள்? அவர்களை பெற்றோர் வளர்த்த விதம் சரியில்லையா? அவர்களுக்கு முன் மாதிரியாக பெற்றோர் இல்லையா? கூடா நட்பில் குணம் கெட்டுப்போனதா?..
சரி என்ன காரணம் எப்படி கையாள்வது என்பதை பார்ப்போம். தனது பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக பெற்றோர் நடந்துகொள்ள வேண்டும். "அப்பன் அண்டப்புளுகனாக இருந்தால் பையன் அகாசபுளுகனாக இருப்பான்" என்பது இன்னும் கிராமத்தில் கிண்டலாக பேசப்படும் பழமொழி. குடுபத்திலுள்ள அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தாத்தா, பாட்டி அனைவரும் பொய் பேசுபவராக இருந்தால் குழந்தை மட்டும் எப்படி உண்மை பேசவேண்டுமென எதிர்ப்பார்க்கமுடியும்?.
அகவே குழந்தைகளின் நடத்தையை நிர்ணயிப்பது பெற்றோர்களே. நாணயமான, கண்ணியமான பெற்றோர்களுக்கு தன் குழந்தை எப்பொழுது பொய் பேசுகிறது என தெரியும்.
அடுத்த வீட்டு பையனை அடித்துவிட்டு உள்ளே வந்து அமைதியாக இருக்கும் தனது மகனோ மகளோ தப்பு செய்துவிட்டு உள்ளே வந்து அமைதியாக இருக்கிறான் என்று தெரிந்துகொண்டே அவனிடம் போய் பக்கத்து வீட்டு பையனை அடித்தாயா என கேட்டல்.. அடிக்கவில்லை என அவர்களே தான் போய் பேசுவதை உருதிபடுத்திவிடுவார்கள். அதற்காக உடனே அவர்களை அடித்துவிடக்கூடாது. அவர்களிடம் அன்பாக பேசி அடிபட்டவனை அழைத்துவந்து இரண்டு போரையும் விசாரித்து இனிமேல் இப்படி ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளகூடாது, அன்பாக இருக்க வேண்டும் என்று கூறி இருவர் கரங்களையும் இணைத்து கை கொடுத்து மகிழவைக்கவேண்டும்.
எல்லா உறவுகளுக்கும் நம்பிக்கை அவசியம் நம்பிக்கை வைக்காமல் நல்ல குழந்தையை உருவாக்கமுடியாது. ஓரிருமுறை போய் சொல்லியது
என்பதற்காக பிள்ளைகளை பற்றி கெட்டவிதமாக முடிவுகட்டிவிட கூடாது. பிறரிடம் தனது குழந்தை பொய் பேசுவான் என்று தாழ்த்தி பேசவும் கூடாது. அடிப்படையில் குழந்தை என் போய் பேசுகிறது என்பதை கண்டறிந்து குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்தால் பொய் பேசுவது நாளடைவில் நின்று விடும். உற்சாகமும் நம்பிக்கையும் நிரம்பிய ஒரு சிந்தனைப் பாதையை குழந்தைகளுக்கு அமைத்து கொடுப்பது பெற்றோரின் கடமையாகும். நமது அணுகுமுறையாலும் அன்பாலும் பிள்ளைகள் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியத்தை உணர்வார்கள்.
இத பதிவை தமிழில் எழுத உதவிய தளம் www.typetamil.in பொய் பேசும் தனது பிள்ளைகளை(குழந்தைகளை) சமாளிப்பது எப்படி?,poi pesum kulandhaigalai petror samalippadhu eppadi, kulandhai valarppu muraigal, parenting tips in tamil, Child psychology, pillaigalai adikka vendaam, kulandhaigalai kandikkum murai, anbaga pesa vendum, poi sollum pillai, unmai pesa vendum, unmai solla vaippadhu eppadi