Type Here to Get Search Results !

குருவும் மூன்று சீடர்களும் - ஜென் கதை

0
"குருவும் மூன்று சீடர்களும்" ஒரு குட்டிக்கதை.. ‪

ஒரு ஊரில் ஒரு வயதான குருவும் அவருக்கு மூன்று சீடர்களும் இருந்தனர்.

அந்த குரு ஒரு நாள் அந்த மூன்று சீடர்களையும் அழைத்து தனக்கு வயதாகிவிட்டது, எனக்கு பிறகு இந்த மடாலயத்தை உங்களில் ஒருவர் தான் தலைமை ஏற்று நடத்த வேண்டும்.

நான் உங்களுக்கு தத்துவ அறிவை வேண்டும் என்ற அளவுக்கு போதித்து விட்டேன் ,,, ஆனால் நீங்கள் மெய்ஞான அறிவை பெற்றால் மட்டுமே ஒரு தலைமையை ஏற்று நடத்த முடியும்,

Short stories in tamil, sindhanai kadhaigal, sirukadhaigal, kutti kadhai, Moral stories in tamil , thatthuvam

ஆகவே நீங்கள் மக்களில் கலந்து இருக்கும் இறையுணர்வையும் மெய்ஞான அறிவையும் கண்டு வாருங்கள் ,நாடு முழுவது பயணித்து ஒரு வருடம் கழித்து வர சொன்னார்.

ஒரு வருடம் கடந்தது, முதலாம் சீடன் சொன்னான், இந்த பயணத்தில் நான் இறைவனைக்கண்டேன் ,அவர் எண்டும் இருக்கிறார் ,எதிலும் இருக்கிறார், ஆனால் அவருக்கு உருவம் இல்லை என்றான்.

இரண்டாம் சீடன் சொன்னான், குருவே இறைவனுக்கு உருவம் இருக்கிறது, அவர் ஒளி வடிவத்தில் காணப்படுகிறார் ,அவரை மனக்கண்ணால் தான் காண முடியும் என்றான் ,

மூன்றாவது சீடன் சொன்னான், குருவே எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது,
இது தான் இறைவன் என்று என்னால் யூகிக்க முடியவில்லை, என் அறிவுக்கு இது எட்டவில்லை என்றான்.

மற்ற இருவரும் கேலியாக பார்த்தனர்.

குருவின் முகத்தில் அளவில்லா சந்தோசம், "நீ சொன்னது தான் உண்மை என்றார் அமைதியாக, எனக்கு பிறகு நீயே இந்த மடாலயத்தை நிர்வகிக்க சரியான ஆள் என்று கூறினார்.

‪#‎அறிவுக்கோ‬ விவாதங்களுக்கோ எட்டாதது ஞானம், தெரியாததை தெரியாது என்று ஒப்புக்கொள், தெரிந்ததாக வேடம் பூணாதே என்கிறது ஜென்.
- KavinNanbenda ‪#‎ஜென்‬‬கதை ‪
guruvum moondru seedargalum jen kadhai, tamil jen stories, Short stories in tamil, sindhanai kadhaigal, sirukadhaigal, kutti kadhai, Moral stories in tamil , thatthuvam

கருத்துரையிடுக

0 கருத்துகள்