Type Here to Get Search Results !

பாதி விலையில் பொருள் தருவதாக மோசடி

0

பாதி விலையில் பொருள் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த  கடை..!!

(11 Sep) சேலம் : சேலத்தில், பாதி விலையில் பொருள் தருவதாகக் கூறி, மதுரை வாலிபர் ஒருவர், பல லட்சம் ரூபாயுடன் ஓடிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம், சின்ன திருப்பதி, என்.ஜி.ஜி.ஓ., காலனி இணைப்பில், நியூ பாலாஜி என்டர்பிரைசஸ் நிறுவனம், ஐந்து மாதங்களுக்கு முன் துவக்கப்பட்டது. மதுரை மாட்டுத் தாவணி பகுதியைச் சேர்ந்த, பத்மநாபன் என்ற வாலிபர், அப்பகுதியில், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, இந்த நிறுவனத்தை நடத்தி வந்தார்.

65 சதவீதம் தள்ளுபடி : அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, சின்ன திருப்பதி பகுதிகளில், குறைந்த விலையில், மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் தருவதாகக் கூறி, விளம்பரம் செய்து உள்ளார். அந்த பகுதியில் உள்ள கல்லூரி பெண்களை, பகுதிநேர வேலைக்கு அமர்த்தினார். 25 முதல் 65 சதவீதம் வரை, ஒவ்வொரு பொருளுக்கும் தள்ளுபடி விலை உள்ளதாக,
half rate cheating, fraud cases in tamiladu , awareness post, vilippunarvu thagaval
பெண்களிடம் ஆசை வார்த்தை கூறினார். 750 ரூபாய் விலை உள்ள நாற்காலி, 250 ரூபாய்க்கும்; 1,300 ரூபாய் மதிப்பிலான மின் விசிறி, 500 ரூபாய்க்கும்; பீரோ, தொலைக்காட்சி பெட்டி, மிக்சி, கிரைண்டர், சோபா, குக்கர், பிரிஜ், வாஷிங் மெஷின் என, பல்வேறு பொருட்களும், பாதிக்கு பாதி விலையில் தருவதாகவும் கூறினார்.

முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை : அந்த பொருட்கள் வாங்குவதற்கும், பல கட்டுப்பாடுகளை விதித்தார். அதில், 'ஒரு மாதத்துக்கு பின் தான், பொருள் கிடைக்கும். முன்பணம் செலுத்த வேண்டும். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை' என, ஒவ்வொருவரிடமும், 20 ஆயிரம், 30 ஆயிரம், ஒரு லட்சம் ரூபாய் வரை வசூல் செய்தார். இரண்டு நாட்களுக்கு முன், திடீரென, நிறுவனத்தை மூடி விட்டு, தலைமறைவாகி விட்டார்.

நிறுவனத்தை இழுத்து மூடினர் : நிறுவனத்தின் முன், அறிவிப்பு பலகை ஒன்றில், 'பணம் செலுத்தியவர்கள், 10ம் தேதி மாலை, 5.30 மணிக்கு, பணம் செலுத்திய ரசீதுடன் வர வேண்டும்' என, எழுதப்பட்டிருந்தது. நேற்று காலை, நிறுவனத்துக்கு வந்த பெண்கள், அது மூடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் மற்ற பெண்களுக்கும் தெரிய வர, பணம் கட்டியோர், பாலாஜி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு விரைந்தனர்; பின் தான், தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்தது.

சின்ன திருப்பதியைச் சேர்ந்த நிர்மலா கூறியதாவது: குறைந்த விலையில் பொருள்கள் வழங்குவதாக, 'நோட்டீஸ்' மூலம் விளம்பரம் செய்தனர். முதலில் செலுத்திய பணத்துக்கு, மாதந்தோறும் பொருள் கொடுத்தனர். அதை நம்பி, 70 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தினேன். இன்று (நேற்று) வந்தபோது, நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டனர்.

paadhi vilaiyil porul tharuvadhaaga koori pala latchm mosadi seidha niruvanam, 65% off, half rate cheating, fraud cases in tamiladu , awareness post, vilippunarvu thagaval, paathi vilai, emaarum makkal, emattram, fraud, furniture fraud, enterprises cheating, cheater

கருத்துரையிடுக

0 கருத்துகள்