Type Here to Get Search Results !

ராஜஸ்தானில் புது முயற்சி: 5 ரூபாய்க்கு 20 லிட்டர் தண்ணீர் - குடிக்க தண்ணீர் தரும் ஏ.டி.எம் மையங்கள்

0
ராஜஸ்தான்: ராஜஸ்தானில் தண்ணீர் பஞ்சம் நிலவும் கிராமங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்களின் தாகம் தணிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பஞ்சம் நிலவும் கிராமங்களில் ஜீவன் அம்ரித் என்ற திட்டத்தை ராஜஸ்தான் அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்படி கவாஸ், குடா, ஜோகாசாகர், பைட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குடிநீர் வழங்கும் ஏ.டி.எம்.கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த ஏ.டி.எம். மையங்களில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதற்காக கிராம மக்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த கார்டை பயன்படுத்தி  20 லிட்டர் குடிநீரை ரூ.5 விலையில் பெற்றுக்
selling water atm in india
drinking water atm in rajasthan

கொள்ளலாம். தற்போது 22 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு ஏ.டி.எம்.கள் மூலம் குடிநீர் விநியோகிக் கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன் பெற்று வருகின்றனர். வருங்காலத்தில் குடிநீர் ஏ.டி.எம்.களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
ராஜஸ்தானில் புது முயற்சி: குடிக்க தண்ணீர் தரும் ஏ.டி.எம் மையங்கள் - 5 ரூபாய்க்கு 20 லிட்டர் தண்ணீர், drinking water atm in rajasthan, selling water atm in india, water rs.5 for 20 litter can, Pure water ATM machines, new inventions, Social service, samooga sevai

கருத்துரையிடுக

0 கருத்துகள்