Type Here to Get Search Results !

இந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த யோகாசனக் கலையை உலகம் முழுவதிலும் பரவச் செய்யத பி.கே.எஸ்.அய்யங்கார் இன்று அதிகாலை காலமானார் ( 20 Aug 2014)

இந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த யோகாசனக் கலையை உலகம் முழுவதிலும் பரவச் செய்ய அருந்தொண்டாற்றிய பி.கே.எஸ்.அய்யங்கார் புனேவில் இன்று அதிகாலை காலமானார்.

யோகக் கலை தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து, அவற்றை நூல்களாக எழுதி வெளியிட்டுள்ள பி.கே.எஸ்.அய்யங்காருக்கு உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான சீடர்கள் உண்டு.

இந்த துறையில் சிறப்பான தொண்டாற்றியமைக்காக மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருதை பெற்ற இவர், தனது குடும்பத்தாருடன் மகாராஷ்ட்டிர மாநிலத்தில் உள்ள புனே நகரில் வாழ்ந்து வந்தார்.

நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வந்த இவர், சில மாதங்களாக இதயம் சார்ந்த கோளாறுகளுக்கு உள்ளானார். கடந்த 12-ம் தேதி சுவாசக் கோளாறு, மற்றும் சிறுநீரக பாதிப்புக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பி.கே.எஸ்.அய்யங்கார் தனது 96-வது வயதில் இன்று அதிகாலை 3.15 மணிக்கு காலமானார்.
yoga-pandit-Bks-iyengar-died-on-20-aug-2014
Tags: yoga-pandit-Bks-iyengar-died-on-20-aug-2014, India leading Yoga guru Iyengar died at his 96 year old in Pune #BKS #Iyengar #yogaguru #yogasanam