பிளிப்கார்ட்டில் இனி செக்ஸ் பொம்மைகள், ஆணுறைகள் உள்ளிட்ட செக்ஸ்
தொடர்பான பொருட்கள் கிடைக்கும்.
கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கும் காலம் மலையேறி வருகிறது. வீட்டில்
இருந்து கொண்டு ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் பழக்கம் அதிகரித்து
வருகிறது. இப்படி ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் பிளிப்கார்ட்
நிறுவனம் தனது வியாபாரத்தை விரிவுபடுத்தியுள்ளது.
(ஆன்லைனில் "அந்த" பொருட்களின் விற்பனை அமோகமாம்!!)
பிளிப்கார்ட் செக்ஸ் தொடர்பான பொருட்களின் விற்பனை பிரிவை புதன்கிழமை
துவங்கியுள்ளது.
பேக்கிங்:
செக்ஸ் பொருட்களை ஆர்டர் செய்பவர்களின் உணர்வுகளை அறிந்து அவற்றை சிறப்பான
முறையில் பேக்கிங் செய்து வீட்டில் வழங்கப்படும் என்று பிளிப்கார்ட்
தெரிவித்துள்ளது.
கூச்சம்: ஆண்கள் கடைகளுக்கு சென்று ஆணுறைகள் வாங்கவே கூச்சப்படுகிறார்கள். அப்படி
இருக்கையில் கடைகளுக்கு சென்று செக்ஸ் பொம்மைகள் வாங்க மாட்டார்கள்.
அப்படிபட்டவர்களுக்காக தான் பிளிப்கார்ட் இந்த பிரிவை துவங்கியுள்ளது.

மேலும் பல
பிளிப்கார்டில் ஆணுறைகள், இன்பத்தை அதிகரிக்கும் சாதனங்கள் வாங்கலாம். இனி
மேலும் பல பொருட்களை அறிமுகப்படுத்தும் எண்ணமும் பிளிப்கார்ட்டிடம் உள்ளது.
Tags: flipkart-starts-to-sell-sexual-welness-products, condom selling online, indian male condom buy online, female condom sell online by flipkart online selling website, intercourse toys, intercourse products buy online in flipkart in india.
Social Plugin