சிம்பு-ஹன்சிகா காதல் தோல்வியில் முடிந்தது அனைவரும் அறிவர். 
இந்த காதல் தோல்வி குறித்து சிம்பு, பல பேட்டிகளில் ஓப்பனாக தன் கருத்தை
 தெரிவித்தாலும், ஹன்சிகா மவுனமாகவே இருந்து வந்தார். இந்த நிலையில் தனது 
காதல் குறித்து ஹன்சிகா, முதல் முறையாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு 
பேட்டியளித்துள்ளார்.
அதில், சிம்புவுடனான பிரிவு பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. 
யாராவது ஒருவராவது அமைதியாக இருக்கணும். அமைதிதான் என்னோட வலிமை. நான் அவரை
 காயப்படுத்த விரும்பவில்லை. ஆனாலும் அவரை இப்போதும் நான் வாழ்த்துகிறேன். 
இந்த விஷயத்தை திரும்பவும் என் வாழ்க்கையில் நான் நினைத்து பார்க்க 
விரும்பவில்லை. நான் அதுல இருந்து ரொம்ப தூரம் போகவே விரும்புகிறேன்.
எத்தனை நாட்கள்  எத்தனை வருடங்களானாலும் நான் இந்த விஷயத்தில் அமைதியாத்தான் இருப்பேன் என்று
 தெரிவித்துள்ளார். காதல் பிரிவிற்கு பின்னரும் 'வாலு' படத்தில் 
சிம்புவுடன் இணைந்து நடித்தார் ஹன்சிகா. தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு 
வேலைகள் முடிந்துவிட்டது. இதன்பிறகு அவர் 'வேட்டை மன்னன்' படத்திற்காக 
சிம்புவுடன் மீண்டும் நடிப்பேன் என்றும் ஹன்சிகா கூறியிருக்கிறார் .
சிம்புவை நான் கயப்படுத்தினேனா..??, இல்லவே இல்லை : ஹன்சிகா