Type Here to Get Search Results !

உலகின் மிகவும் வயதான நபர் ஜப்பான் நாட்டை சேர்ந்த 111 வயது முதியவர்..

 உலகின் மிகவும் வயதான நபர் ஜப்பான் நாட்டை சேர்ந்த 111 வயது முதியவர்..

டோக்கியோ: உலகின் மிகவும் வயதான நபராக ஜப்பான் நாட்டை சேர்ந்த 111 வயது முதியவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் சகாரி மொமோய் என்ற 111 வயது தாத்தா. இவர் கடந்த 1903 ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி பிறந்தவர். ஆசிரியராக தனது வாழ்க்கை பயணத்தை துவக்கிய சகாரி, பள்ளியின் தலைமை ஆசிரியராக பணி ஓய்வு பெற்றுள்ளார்.

தற்போது 111 வயதாகும் சகாரி உலகிலேயே மிகவும் வயதான நபர் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இன்னும் 2 ஆண்டுகள்... இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தான் இன்னும் இரண்டு ஆண்டுகள் வாழ விரும்புவதாக மெல்லிய குரலில் கூறினார்.

பொழுதுபோக்கு... வயது முதிர்வின் காரணமாக லேசாக செவித்திறன் பாதிக்கப் பட்டிருந்த போதும், தொலைக்காட்சி பார்ப்பது, செய்தித்தாள்களை வாசிப்பது போன்றவை இவரது அன்றாட பொழுதுபோக்குகளாம்.

#oldestman #111year #SakariMomoi #japan - Worlds oldest man is in Japan, 111 year old Sakari Momoi from japan is the oldest man in the world, adhiga vayadhu konda japan nattai serndhavarin vayadhu 111

ஜப்பான் பேரழிவுகள்... ஜப்பான் நாட்டில் நடந்த பேரழிவுகளை சந்தித்த சகாகி, ஹிரோஷிமா நாகசாகி குண்டு வெடிப்பு மற்றும் 2011-ல் நாட்டையே உலுக்கிய சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளில் இருந்து தப்பியுள்ளார்.

உலகின் பாட்டி... உலகின் மிகவும் வயதான பெண்மணியான 116 வயது மிசாவோ ஒகாவாவும் ஜப்பானில் தான் வாழ்ந்து வருகிறார். இதன் மூலம் வயதான ஆண் மற்றும் பெண்ணைக் கொண்ட நாடு என்ற சிறப்பை ஜப்பான் ஒருசேரப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.