Type Here to Get Search Results !

முகபாவம் ...

face expressions benifits in tamil, muga baavanaigal

முகபாவம் ................

நாம் தினசரி பல்வேறு வகைப்பட்ட மக்களை சந்திக்கிறோம்.அப்போது நம் முகம் வெவ்வேறு பாவங்களைக் காட்டுகிறது.மனித உறவுகளை வளர்ப்பதில் முக பாவங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.நம் முகத்தை எப்போது எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோமா?

தனிப்பட்ட மனிதர் பாராட்டும்போது.............................
பாராட்டை உள்ளம் மகிழ்ந்து புன்னகையுடன் ஏற்றுக் கொள்வதைப்போல முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.
பலர் முன்னிலையில் நாம் பாராட்டப்படும்போது.
மலர்ந்த முகத்துடன் காணப்படலாமே தவிர,புன்னகைகூட வரக்கூடாது. வெட்கப்படுவதுபோலக் காண்பித்துக் கொள்ளலாம்.

மற்றவர்கள் குற்றம் சாட்டும்போது:...........................
சிறு குறைகளை சொன்னால் ,தவறுதான் என்பதுபோல முகத்தை வைத்துக் கொள்ளலாம்.பெரிய தவறுகள் என்றால்,''அடடே,இப்படி செய்து விட்டேனே! இனி,இந்த தவறை செய்ய மாட்டேன்'',என்றெல்லாம் சிந்திப்பதுபோல முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறர் உதவி கேட்கும்போது ................................
முகம் சிறுத்துப் போகாமல் புன்னகை மாறாமல் பேச வேண்டும்.இயலாது என்றால்கூட அதை புன்னகை மாறாமல் சொல்ல வேண்டும்.உதவி மறுக்கப்படலாம்.ஆனால் மறுக்கப்பட்ட விதம் மோசமானதாக அமைந்து விடக்கூடாது.

நாம் அவமானப் படுத்தப்படும்போது......................
மிக அமைதியாய்,மிகவும் சிந்தனை வயப்பட்டவரைப்போல,முடிந்தால் எந்த வித சலனமும் முகத்தில் காட்டாது இருக்க வேண்டும்.
உடன்பாடற்ற கருத்தை ஒருவர் சொல்லும்போது
இலேசான கேலிப் புன்னகை அல்லது ஒரு அதிருப்தி சிரிப்பு.

நாம் பாதிக்கப்படும்போது...................
இந்த பாதிப்பு என்னை ஒன்றும் செய்து விடாது என்பதுபோல அந்த விஷயத்தை அதிகம் பொருட்படுத்தாதவர்போல (அது உள்ளுக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தினாலும்) முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் கேலி செய்யப்படும்போது...............
அது இயல்பான நகைச்சுவை என்றால் நாமும் சேர்ந்து சிரிக்கலாம்.
கேலியில் எந்தவித உண்மையும் இல்லை:சற்று மோசமான விஷயம் என்றால் இலேசான அலட்சியப் பார்வை போதும்.

பிறர் நம்மைப் பார்க்க வரும்போது.................................
நிச்சயம் பிரகாசமாய் ,சற்றும் முகம் சுளிக்காமல் மிக மகிழ்ச்சியாய் முகம் இருக்க வேண்டும்.


Mugabhaavam Face expressions | how to handle face expressions | how to keep face for emotions | emotional face | smiley face expressions | crying sad expressions