இரவுகளில் கடைகளை திறந்து வைத்திருப்பதற்கும் சட்டம் ஒழுங்கிற்கும் என்ன சம்மந்தம் என்று புரியவில்லை.
சிங்கப்பூர் , தாய்லாந்து நாடுகளை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். 24
மணி நேரமும் கடைகள் திறந்தே உள்ளன. 24 மணி நேரமும் பியர் கிடைக்கிறது.
இதற்கே நம் நாட்டை விட அதிக அளவில் வெளி நாட்டு ஆட்கள் சுற்றும் நாடு,
இரண்டுமே.
இங்கே இரவு 11 மணிக்கு மேல் தண்ணி பாட்டில் வாங்க கடையை தேட வேண்டியுள்ளது. டீக்கடைக்கு நாதியில்லை.5 ஸ்டார் ஹோட்டல் போனால் 150 ரூவா கொடுத்து 2 இட்லி சாப்பிடலாம்.
கடைகள் திறந்து இருந்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பது ஒரு பேச்சிக்கு உண்மை என்று எடுத்துக்கொண்டால் கூட , அப்படி கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமை. கடைகளை சாத்துவது அல்ல.
வெளிநாட்டில் இரவு 2 மணிக்கு தினமும் ஏதோ திருவிழா போல மக்கள் கூட்டம் பார் , ரெஸ்டாரெண்ட் , பீச் என அங்கும் இங்கும் மகிழ்ச்சியாக உலாவிக்கொண்டு இருக்கையில் , இங்கே மயான அமைதி.
வளர்ந்த நாடு , வல்லரசு என்பதெல்லாம் கோடிக்கணக்கில் ஆயுதம் வாங்கி எண்ணெய் போட்டுக்கொண்டு இருப்பதில் அல்ல. இரவு பதினோரு மணிக்கே அனைத்தையும் அடைத்து விட்டு தூங்குவதால் அல்ல. பாதுகாப்பான நாடு , கொண்டாட்டமான நாடு என்று பெயரெடுப்பதிலும் உள்ளது.
பெங்களூரில் வீகெண்டில் மட்டும் இரவு 1 மணி வரை பார் & பப் திறந்து வைத்துக்கொள்ள அரசு அனுமதி. இதனால் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகாது. அதை கெடாம நாங்க பாத்துக்கறோம் என பெங்களூர் கமிஷனர் தில்லாக பேட்டி.
பெங்களூர் ஆல்வேஸ் ராக்ஸ் !
by Araathu அராத்து