1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில்
அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது .
2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது .
உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால்
நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.
3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது.
உதாரணமாக வேலையில்லாமல சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில்
தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம்
போவதே தெரியாது.
4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள்
சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்..
5. பிள்ளையார் சதுர்த்தி அன்று பிள்ளையார்
கிடைக்கவில்லை என்றால் பிள்ளையார் போல
வேஷமிட்டி பிள்ளையாராக பயன்படுத்தலாம்.
6. பாக்கெட்டில் பெரிய மற்றும் வெய்ட்டான பொருட்களைப் போட்டால்
கீழே விழாமல் தாங்கியாக இருப்பதுடன் பாக்கெட் கிழியாமலும்பாதுகாக்கிறது.