Thalaiva Movie Review from England - தலைவா - திரைப்பட விமர்சனம்...............
இந்த படத்தை எந்த காரணத்திர்க்காக நிறுத்தினாங்கன்னு தெரியாது - ஆனா அதுக்கும் எந்த வழியிலும் சுத்தமா அவசியமும் இல்லை...........கொஞ்சம் நாயகன், கொஞ்சம் பாஷா கொஞ்சம் முதல்வன் கொஞ்சம் புதிய பறவை கொஞ்சம் அங்கிட்டு கொஞ்சம் இங்கிட்டுனு இந்த தடவை ஃபாரின் அழுவல் இல்லை தழுவல் இல்லாம உள்ளூரிலே சுட்டு நல்ல நஞ்சு போன பிளேடு உள்ள மிக்ஸில போட்டு அடிச்ச படம் தான் தலைவா..............
ஷாருக் கான்ல இருந்து ஆப்ரகம் வரைக்கும் அத்தனை மும்பாய் பட ஹீரோஸ் தமிழ் நாட்டை நோக்கி வர நம்மூர் ஆட்கள் எல்லாம் பாலிவுட்ல சான்ஸ் கிடைக்கலைனா என்னா? நாம் பாம்பயிலே படம் எடுப்போம்னு சமீபமா தமிழ் நாட்டு அனேக பிக் பட்ஜெட் படங்களுக்கு தமிழ்ல சப் டைட்டில் போட்டு படம் காட்டும் கோலிவுட் பிரமாக்களுக்கு விதிவிலக்கில்லாமல் இந்த படமும் மும்பாயில ஆரம்பிக்குது அந்த பழைய மும்பாய் மாதிரியே நாசர் தன் பிள்ளையை தோள் மேல் துக்கிட்டு வராரு மும்பாய் கலவரத்துக்கு நடுவுலே "வேதா பாய் மர் கயா"னு யாரோ கணபதி பப்பா மோரியாக்கு நடுவுல சொல்ல அப்புறம் ரணகளம் - சென்சார் ஆஃபிஸ் யூ சர்டிஃபிக்கேட் எப்படி கொடுத்தாங்கன்னே தெரியலை இந்த கறிக்கடைக்கு அம்பி விலாஸ்னு பேர் வச்ச மாதிரி................. அப்புறம் விசய் அப்பா சத்யாராஜ் மும்பாய் டானாக உருவாக டக்குனு கட் பண்ணீனா விசய் ஆஸ்த்ரேலியால டான்ஸ் ஆட - ப்ரோ (BRO)னு விசய் எத்தனை தடவை இந்த படத்துல சொல்றாருன்னு கண்டுபிடிக்கனும்னு போட்டி வச்சா அத்தனை பேரும் தோத்துடுவாங்க அத்தனை ப்ரோ அம்புட்டு யூத்தாம்........
அரசியல் கட்சி இளைஞ்சரனி தலைவர்கள் மாதிரி....................
இமு / இபி அப்படின்னா - இம்சைக்கு முன் இம்சைக்கு பின் இல்ல - இடைவேளைக்கு முன் / இடைவேளைக்கு பின் தான் - ஆனாலும் நென்டும் ஒன்னுதான்......... ஒரு பாட்டுல தலைவன் ஆன ஒரே படம் இது தான் ஆனா எதுக்கு தலைவன் ஆகுறார் ஏன் நாயகன் கமல் மாதிரி ஆஆஆஆஆஆஆஆங்னு அழ ட்ரை பன்றார்னு தெரியலை புரியலை ஆமாயா விளங்கள.......... அப்பாலைக்கா ஆங் என்ன சொல்ரதுனு தெரில அதனால படம் முடியருதுக்குள்ள காதுல டக்காளி சட்னி வந்திருச்சு................. சுறா பட ரெக்கார்டை முறியடிக்கும் இந்த டலைவா....... நான் அதை அடித்து சொல்வேன்...........தலைவான்னு விசய்யை இதுல சொல்றது யாருமில்லை நம்ம இன்டர்னெட் புகழ் சாம் ஆன்டர்சன்னைத்தான் மனுஷன் 10 நிமிஷம் வந்தாலும் கலக்க்கிட்டு கடைசில விசய்யை போட்டு தாக்கிட்டு ஒரு வசனம் பேசிட்டு போவாரு பாருங்க அதுக்குன்னே நீங்க இந்த படத்தை பார்க்கனும்.............சந்தானம் பாவம் கிடைச்ச கேப்ல எவ்வளோ டிரை பண்ணியும் செல்ஃப் எடுக்கல - இந்த படத்தின் ஹீரோ விசய் இல்லை அமலாபால் தான்..........விசயக்கு கிடைத்த மெகா வெற்றி காவலன் / துப்பாக்கிக்கு பிறகு வந்த பெரிய ரோல் ஏ கோஸ்டர் படம் - அவர் இனிமேல் கண்டிப்பாய் அவருக்கு வரும் மேட்டரை மட்டும் செய்தால் அவர் அவர் இன்னும் பிரகாசிப்பார் - டைட்டா எம்ஜிஆர் மாதிரி சட்டை போட்டுகின்னு கையை தூக்கினா எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது என கூறி நான் ஒரு நல்ல ஈ என் டி டாக்டரை போய் பார்த்து காதுல கன்னுல ஆன டேமேஜை சரி பண்ணனும் சாமியோவ்.........
தலைவா ஒரு வரி விமர்சனம் - தலைவ(லி)ஆஆஆஆஆஆஆஆ