விழு்பபுரம் மாவட்டம் பிரம்மதேசம் கண்ணன், ராஜேஸ்வரி தம்பதியினரின் ஆண் குழந்தை ராகுலின் உடல் தீப்பிடித்து எரிவதாக கூறப்படும் சம்பவத்தில் இன்று திண்டிவனம் டி.பரங்கனி கிராமத்தில் உள்ள ஆண் குழந்தை ராகுலை விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் தலைமையிலான குழுவினர் பரிசோதித்து வருகின்றனர். இதுகுறித்து இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ”குழந்தையின் மருத்துவ செலவினை அரசே ஏற்கும்” என்றார்.
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த டி.பரங்கணி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகளான கர்ணன்(26), ராஜேஸ்வரி(23) இவர்களுக்கு ராகுல் என்ற இரண்டு மாத கைக் குழந்தை உள்ளது.ராஜேஸ்வரி தன் தாய் வீடான மோழியனூரில் தங்கியிருந்த போது, இரண்டு மாத ஆண் குழந்தை திடீரென தீப்பிடித்து எரிந்தது.தீக்காயத்திற்கு சிகிச்சை அளித்த பின்பும் அதைத் தொடர்ந்து இரண்டு முறை தீப்பிடித்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து புதுச்சேரி அபிஷேகபாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில், குழந்தையுடன் ராஜேஸ்வரி தங்கியிருந்த போதும் இரண்டு முறை தீப்பிடித்துள்ளது.இந்நிலையில்
குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர் ஜெயப்பிரகாஷ் கூறுகையில், இரண்டு மாத குழந்தைக்கு உடலில் பல்வேறு தீக்காயங்கள் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.குழந்தைக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொல்லைகள் இல்லை. தீக்காயங்களும் சில நாட்களில் சரியாகி விடுகின்றன. இது புரியாத புதிராகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தந்தை கர்ணன், குழந்தை பிறந்ததில் இருந்தே ஏதாவது ஒரு விபரீதம் நடந்து கொண்டு தான் உள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம், குழந்தையை நாங்கள் வளர்ப்பதா அல்லது அரசிடம் ஒப்படைப்பதா என குழப்பமாக உள்ளது என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையிதான் .குழந்தை ராகுலை விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் தலைமையிலான குழுவினர் பரிசோதித்து வருகின்றனர். இதுகுறித்து இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ”குழந்தையின் மருத்துவ செலவினை அரசே ஏற்கும்” என்றார்.