
டப்ளின் நகரில் ஒரு நாடகக் கொட்டகை. அதன் மேனேஜர் டாலி. அவர் தன் நண்பருடன், மொழி தொடர்பாக ஏதோ விவாதத்தில் ஈடுபட்டிருந்தபோது ஆவேசமாகி, “இன்னும் 24 மணி நேரத்தில் அர்த்தமே இல்லாத ஒரு சொல்லை பிரபலமாக்கிக் காட்டுகிறேன், பார்!” என்று சவால் விட்டார்.
மறுநாள் காலை, டப்ளின்வாசிகள் கண் விழித்தபோது, டப்ளின் நகரச் சுவர்கள் எல்லாவற்றிலும் QUIZ என்ற வார்த்தை காணப்பட்டு, அப்படியென்றால் என்ன என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டு தலையைப் பிய்த்துக்கொண்டார்கள். இந்தச் சொல் அன்று மாலைக்குள் டப்ளின் நகரம் முழுக்கப் பிரபலமான சொல்லாகிவிட்டது. டாலி ஜெயித்துவிட்டார்.
அன்றிலிருந்து, கேள்வி கேட்டு பதில் வரவழைப்பதற்கு ‘க்விஸ்’ என்கிற சொல் பயன்பட ஆரம்பித்தது. 1780-ல் உருவான சொல் இது!.