அதுக்கு அவன்.............
"கார் வாங்கறது பிரச்சினை இல்லடா........ஆனா அதுக்கு முன்னால சில விவரம் எல்லாம் சொல்றென் கேட்டுக்கோ..............."
"அதுக்குதாண்டா உன்கிட்ட வந்துருக்கேன்................"
"முதல்ல ஒண்ணு தெரிஞ்சுக்கோ..........இப்போ நான் உனக்கு பெட்ரோல் எப்படி சேமிக்கறதுன்கிறத ஒரு உதாரணம் மூலமா விளக்கப் போறேன்."
அவன் வீட்டுல எங்கயோ தேடி ஒரு 3 கலர் கார் படத்த எடுத்தான்.
"இந்த மஞ்சள் கலர் கார்ல நீ ஒரு 50லி பெட்ரோல் அடிச்சு 80 கிமீ வேகத்துல போனீனா ஒரு 300 கிமீ வரைக்கும் மைலேஜ் கிடைக்கும்."
"ம்ம்ம்................"
"இந்த சிவப்பு கலர் கார்ல நீ ஒரு 50லி பெட்ரோல் அடிச்சு 100 கிமீ வேகத்துல போனீனா ஒரு 200 கிமீ வரைக்கும் மைலேஜ் கிடைக்கும்."
"ம்ம்ம்................"
"இந்த பச்சைக் கலர் கார்ல நீ ஒரு 50லி பெட்ரோல் அடிச்சு 50 கிமீ வேகத்துல போனீனா ஒரு 400 கிமீ வரைக்கும் மைலேஜ் கிடைக்கும்."
"ம்ம்ம் சூப்பர்டா எப்படிடா இவ்வளோ அழகா சொல்ல முடியுது.............."
"உனக்கு காரைப் பத்தி எதுவும் தெரியாதுன்னு தான் நான் இப்படி விளக்கமா சொன்னேன். இப்போ நீ சொல்லு இதுல இருந்து நீ என்ன தெரிஞ்சுக்கிட்ட?"
"நாம வாங்கப் போற கார் பச்சைக் கலர்ல இருந்தா நமக்கு நல்ல மைலேஜ் கொடுக்கும். என்ன சரிதான.............."
"டேய் வீணாப் போனவனே..........இதுக்கா நான் இவ்வளவு நேரம் தொண்டைத் தண்ணி வத்த
எதுக்குங்க இவன் இவ்ளோ டென்ஷன் ஆயிட்டான்.
உங்க யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன் ப்ளீஸ்!
Ravi Swaminathan