Type Here to Get Search Results !

மாமன் மச்சானுக்கு விளக்குமாறு அடி..

Dhinakaran Tamil news paper news மாமன் மச்சானுக்கு விளக்குமாறு அடி. கோயில் திருவிழா. Dinakaran news paper news

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கோயில் திருவிழாவில் மாமன், மச்சான்
உறவு முறை உள்ளவர்கள் விளக்குமாறால் ஒருவரை, ஒருவர் தாக்கி கொள்ளும் விநோத திருவிழா நடந்தது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 5 கிலோ மீட்டர் தொலைவில் மறவபட்டி கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

Dhinakaran tamil news paper news மாமன் மச்சானுக்கு விளக்குமாறு அடி | கோயில் திருவிழா | வினோத செய்திகள் | வினோத வழிபாடு | விநோதம் | Dinakaran news paper news
இங்கு பல்வேறு சமூகத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு நூற்றான்டு பழமையான முத்தாலம்மன் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். சித்திரை திருவிழா மூன்று நாட்கள் நடக்கும். இரண்டாம் நாள் திருவிழாவில் முக்கிய அம்சமாக உறவினர்கள் ஒன்று கூடுவர்.

மாமன், மச்சான் உறவு முறை உள்ளவர்கள் கோயிலின் முன்புள்ள மைதானத்தில் கூடி சேற்றை ஒருவருக்கு ஒருவர் உடலில் பூசிக் கொள்வர்.பின்னர், திரைப்படப் பாடல்களை அதிக சப்தத்துடன் ஒலிக்கச் செய்து ஆடிப்பாடுவர். இதில் சேற்றில் நனைத்த விளக்குமாறை (துடைப்பத்தை) எடுத்து மாமன், மச்சான் முறையுள்ளவர்கள் மாறி, மாறி அடித்தபடி ஆடுவர். இவ்வாறு அடித்து கொள்வதன் மூலம், தங்களுக்குள் இருந்துவரும் பகை தீர்வதாக கிராம மக்கள் நம்புகின்றனர்.

நேற்று நடந்த இந்த விநோத திருவிழாவை சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.இதுகுறித்து, மறவபட்டி கிராமத்தை சேர்ந்த மகாராஜன் கூறியதாவது:முத்தாலம்மன் கோயில் 110 ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. மூதாதையர்கள் வழக்கப்படி ஆண்டுதோறும் 3 நாட்கள் நடக்கும் திருவிழாவில் 2ம் நாள் பிற்பகலில் உறவினர்கள் ஒன்று கூடி, கோயிலின் முன் ஒருவரை ஒருவர் விளக்குமாறால் அடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதை நேர்த்திக்கடனாக பக்தர்கள் விரதமிருந்து செய்கின்றனர்.

நேற்று நடந்த இந்த விநோத திருவிழாவை சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.இதுகுறித்து, மறவபட்டி கிராமத்தை சேர்ந்த மகாராஜன் கூறியதாவது:முத்தாலம்மன் கோயில் 110 ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. மூதாதையர்கள் வழக்கப்படி ஆண்டுதோறும் 3 நாட்கள் நடக்கும் திருவிழாவில் 2ம் நாள் பிற்பகலில் உறவினர்கள் ஒன்று கூடி, கோயிலின் முன் ஒருவரை ஒருவர் விளக்குமாறால் அடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதை நேர்த்திக்கடனாக

பக்தர்கள் விரதமிருந்து செய்கின்றனர். இதன் மூலம் மாமன், மச்சான் முறையுள்ளவர்களிடையே உள்ள முன்பகை தீர்ந்து நட்பு ஏற்படுகிறது.

 இந்நிகழ்ச்சி பெண்கள் மற்றும் குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்கள் முன்னிலையில நடப்பதால், எவ்வித பிரச்னையும் ஏற்படுவதில்லை. இந்த விநோத திருவிழாவை காண ஆண்டிபட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து பார்த்துச் செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Courtesy: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=48291 

 Dhinakaran tamil news paper news மாமன் மச்சானுக்கு விளக்குமாறு அடி | கோயில் திருவிழா | வினோத செய்திகள் | வினோத வழிபாடு | விநோதம் | Dinakaran news paper news | daily tamil news paper online