World Tamil population list official language நாம் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அல்ல, உலகத் தமிழர்கள் | இந்திய தமிழர்கள்
தமிழ் மொழி இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் மட்டும் தான் பேசப்படுகிறது என்பது தவறு. மேலும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் இந்திய தமிழர்கள் தான் அங்கு தமிழை வளர்க்கிறார்கள் என்பதும் தவறு.உண்மை என்னவென்றால், 19-ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய அரசால் தென்னிந்தியா மற்றும் ஈழத்தில் இருந்து மலாயா (மலேசியா), சிங்கை
(சிங்கப்பூர்) மேலும் மொரிசியசு, பர்மா போன்ற நாடுகளுக்குத் தமிழர்கள் படைமறவர்களாகவும் தோட்டத் தொழிலாளிகளாவும் பணிப்புரிய கொண்டு வரப்பட்டனர். பர்மா வாழ் தமிழர்கள் அந்நாட்டின் விடுதலைக்குப் பின்னர் மீண்டும் தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். மலாயா, சிங்கை, மொரிசியசு வாழ் தமிழர்கள் மட்டும் தமிழர்களும் இந்நாடுகளில் ஒரு குடிமக்களாக வாழ தொடங்கி விட்டனர்.
தற்பொழுது மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் ஐந்தாவது தலைமுறை தமிழர்கள் வாழ்கின்றனர். இந்நாடுகளில் தமிழ் மொழி ஒரு அலுவல் மொழியாக(Official language) உள்ளது. மேலும், சிங்கையின் பணத்தாள்களில் தமிழ் எழுத்துகளைக் காணலாம். அது போல, மொரிசியசு பணத்தாள்களில் தமிழ் எழுத்துகளுடன் தமிழ் எண்களையும் காணலாம். மலேசியாவின் அனைத்துலக வானூர்தி நிலையங்களில் தமிழில் அறிவிப்புகளைக் கேட்கலாம். மலேசியா, சிங்கை, மொரிசியசு நாடுகளில் மட்டுமே ஏறத்தாழ மூன்று மில்லியன் தமிழ் குடிமக்கள் வாழ்கின்றனர்.
World Tamil population list official language நாம் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அல்ல... உலகத் தமிழர்கள்!!.. |
ஒரு சிறு வேண்டுகோள், இனியாவது தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்று தன்நலமாகப் பேசாமல்... உலகத் தமிழர்கள் என்று பொதுநலமாகப் பேசுங்கள். தமிழ்நாட்டில் வாழ்ந்தால் தான் தமிழர்கள் என்றாகி விடாது. உலகில் எந்த இடுக்கிலும், தமிழைப் பேசி தமிழச்சியைத் தாயாய்க் கொண்டுள்ளார்களோ.. அவர்களெல்லாம் தமிழர்களே!
Via Learn To Speak Tamizh (தமிழ் பேச கற்று கொள்ளுங்கள்)World Tamil population list official language நாம் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அல்ல... உலகத் தமிழர்கள் | இந்திய தமிழர்கள்
Social Plugin