கால்நடை மரபு வைத்திய முறைகள் - வயிறு உப்புசம் (Bloat)
கால்நடைகளில் உப்புசம் அல்லது நுரையோடு கூடிய வயிறு உப்புசம் தீவன மாறுபாடுகளினால் ஏற்படக் கூடியது. இது மிக எளிதில் செரிக்கக் கூடிய தானிய வகை உணவு மற்றும் ஈரமான பசுந்தீவனங்கள் அதிகமாக உண்பதால் ஏற்படுகிறது.
ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருத்துவப் பொருட்கள்
வெற்றிலை-10 எண்ணிக்கை,
பிரண்டை-10 கொழுந்து,
வெங்காயம்(சின்ன வெங்காயம்) -15 பல்,
இஞ்சி -100 கிராம்,
பூண்டு -15 பல்,
மிளகு-10 எண்ணிக்கை,
சின்ன சீரகம்-25 கிராம்,
மஞ்சள்-10 கிராம்.
வெங்காயம்(சின்ன வெங்காயம்) -15 பல்,
இஞ்சி -100 கிராம்,
பூண்டு -15 பல்,
மிளகு-10 எண்ணிக்கை,
சின்ன சீரகம்-25 கிராம்,
மஞ்சள்-10 கிராம்.
சிகிச்சை முறை (வாய் வழியாக)
சின்ன சீரகம் மற்றும் மிளகினை இடித்து பின்பு மற்ற பொருட்களோடு கலந்து அரைத்து இக்கலவையை 200 கிராம் கருப்பட்டியுடன் (பனை வெல்லம்) கலந்த பின் சிறு சிறு உருண்டைகளாக பிரித்து கல் உப்பு (தேவைப்படும் உப்பு – 100 கிராம்) சேர்த்து ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள்ளே செலுத்த வேண்டும்.