Type Here to Get Search Results !

தாய் பால் அதிகரிக்க, பால்கட்டு குறைய என்ன செய்யலாம்

0

தாய் பால் ஊற, தாய் பால் அதிகரிக்க என்ன சாப்பிடலாம்பால்கட்டு குறை என்ன பாட்டி வைத்தியம் செய்யலாம்..?


உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும். தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கச் செய்யலாம்.
How to increase breast milk production- Thai paal adhiarikkum unavugal, paal kattu kuraiya paati vaithiyam, பால் சுரக்க பால்கட்டு குறைய பாட்டி வைத்தியம், தாய் பால் அதிகரிக்க உணவுகள்

தாய் பால் சுரக்க வைக்கும் உணவுகள், தாய் பால் அதிகரிக்க என்ன சாப்பிடலாம்


வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி சிறிது நாட்டு சர்க்கரை கலந்து பாயாசம் போல செய்து குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும்.

மற்றும் சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் சுரக்கும்.

பேரீச்சம்பழத்தை குழந்தை பிறப்பதற்கு முன்னும், பிறந்த பின்னும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

கீரை வகைகள்


கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதமும், மாவுச் சத்தும், வைட்டமின்களும் இருப்பதோடு பிரோகஸ்ட்ரான் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை இது அதிகரிக்கச் செய்கிறது. இதனால் பால் நிறைய சுரக்கிறது.

அரைக்கீரை சமைத்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.

முருங்கைகீரை பொரியல் செய்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.


தாய்ப்பால் சுரப்பதற்கு உதவும் முருங்கைப்பூ பால் - தயாரிப்பு முறை

கேழ்வரகு அடை


எள்ளு சிறிதளவு கேழ்வரகு மாவு, ஒன்றாக சேர்த்து இடித்து அடை செய்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் பின்பு தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு வேண்டிய தாய்ப்பால் சுரக்கும்.

அருகம்புல் சாறுடன், தேன் கலந்து சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும்.

சீரகத்தை வறுத்து பொடியாக்கி அதே அளவு வெல்லம் சேர்த்து சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.


குழந்தை பிறந்தவுடன் கவனிக்கவேண்டிய விஷயங்கள் - தெரிந்துகொள்ளுங்கள் !!

பால் சுரக்க பாட்டி வைத்தியம் - தண்ணீர்விட்டான் கிழங்கு (சதாவேரி)


இதிலுள்ள ‘Shatavarin’ வேதிப்பொருள், பால் சுரப்பிகளின் வளர்ச்சியை அதிகரித்துப் பால் சுரப்பைத் தூண்டுகிறது. சதாவேரியில் உள்ள “Tryptophan’ என்னும் அமினோஅமிலம் புரோலாக்டின் மூலமாகத் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதில் இருக்கும் ‘Anthocyananin’ எனும் வேதிப்பொருள், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து, கொழுப்பு சத்தைக் கரைக்கிறது, ‘Asparagamine- A ‘புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

சதாவேரி கிழங்கைக் கொண்டு செய்யப்படும் சதாவேரி லேகியம் தாய்ப்பால் சுரப்பைத் தூண்டுவது மட்டுமன்றி, சிறுநீரகப் பாதையில் ஏற்படும் தொற்றையும் அழிக்கக்கூடியது. மகப்பேற்றுக்குப் பின்னர்க் கருப்பையை மீண்டும் பழைய நிலைக்கு விரைவாகக் கொண்டுவர, இந்தத் தண்ணீர்விட்டான் கிழங்கு உதவுகிறது.

ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் அளவு பாலில் காய்ச்சி உண்டால், தாய்பாலில்லாத பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் உற்பத்தியாகும்.

கைக்குத்தல் அரிசி


நவீன சமுதாயம் மறந்த கைக்குத்தல் அரிசியை, மீண்டும் சமையல் அறைக்குள் வரவேற்பது அவசியம். ஏனெனில் ‘பழுப்பு அரிசியில்’ உள்ள செரடோனின் பால் சுரப்பைத் தூண்டும் புரோலாக்டின் ஹார்மோனைத் தூண்டுகிறது.

பாகற்காயின் இலையை அரைத்து மார்பகங்களில் பற்றுப் போட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

பால் பெருக்கி இலை


ஆமணக்கு இலைகளுக்குப் பால்பெருக்கி செய்கை உண்டு. ஆமணக்கு இலைகளைக் எண்ணெயில் வதக்கி மார்பில் போட்டுவர, பால் சுரப்பு அதிகரிக்கும். இதைப் போலவே இலுப்பை, காட்டாமணக்கு இலைகளையும் மார்பில் வைத்துக் கட்டலாம். வெற்றிலையை விளக்கெண்ணெயில் வதக்கி மார்பில் கட்டிவரப் பால் சுரப்பு அதிகரிக்கும்.

வெற்றிலைகளை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்ட தாய்ப்பால் சுரக்கும்.

பால்கட்டு குறைய பாட்டி வைத்தியம்


துளசி, அதிமதுரம் ஆகியவற்றை வெந்நீர் கொண்டு சந்தனம் போல் அரைத்து தாயின் மார்பகத்தில் தடவினால் பால் சுரக்கும்.

பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றுப் போட்டால் பால்கட்டு குறைந்து வீக்கமும் குறையும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்