பெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் ஒருசில குணங்களால் தான்.
எந்த மாதிரியான குணங்களைக் கொண்ட ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
- கர்வத்துடன் இருக்கும் ஆண்கள்: நான் ஒரு ஆண் என்ற கர்வத்துடன் இருக்கும் ஆண்களால் பெண்களை கவர முடியாது. மேலும் இந்த குணமுள்ள ஆண்களிடம் பழகுவதை அறவே தவிர்ப்பார்கள்.
- கெட்ட வார்த்தையில் திட்டும் ஆண்கள்: பெண்கள் கெட்ட வார்த்தையில் திட்டும் குணம் உள்ள ஆண்களிடம் பழக விரும்பமாட்டார்கள். ஏனெனில் இந்த குணம் இருந்தால், எந்த ஒரு சிறு விஷயத்திற்கு திட்டும் போதும், கெட்ட வார்த்தையை பயன்படுத்துவார்கள். எனவே இத்தகைய கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஆண்களுடன் உறவுமுறையைத் தொடர்வதைத் தவிர்ப்பார்கள்.
- சுயநலத்துடன் இருக்கும் ஆண்கள்: ஆண்களுள் எவர் மிகவும் சுயநலத்துடன் இருக்கிறார்களோ, அத்தகயைவர்களுக்கு காதல் நிலைக்காது. ஏனெனில் இத்தகையவர்கள் எப்போதும் தன்னைப் பற்றியே நினைத்தால், எந்த பெண்ணுக்கு தான் பிடிக்கும்?
- பெண்களுக்கு குடிகாரர்களை பிடிக்கவே பிடிக்காது. அதற்காக சுத்தமாக பிடிக்காது என்று சொல்ல முடியாது. ஆனால் தினமும் குடித்தால், அத்தகையவர்களுடன் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ முடியாது என்பதால் தான்.
- உறவுமுறை நீண்ட நாட்கள் நிலைக்க வேண்டுமெனில் சந்தேகம் இருக்கவே கூடாது. அது உறவுமுறையை அழிப்பதோடு, வெறுப்பை சம்பாதிக்கும். எனவே இந்த குணமுள்ள ஆண்களையும் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.
- சைகோ குணமுள்ள ஆண்களுடன் இருக்கவே வெறுப்பார்கள். ஏனெனில் இத்தகைய குணமுள்ள ஆண்களிடம் எவ்வளவு பாசம் இருக்கிறதோ, அதே அளவு ஆபத்தும் இருக்கும்.
- பெண்களுக்கு ரொமான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் காதல் செய்யும் ஆணிடம் ரொமான்ஸ் இல்லாவிட்டால், பின் அதுவே இருவருக்கிடையே சண்டைகளை ஏற்படுத்தி, பிரிவுகளை ஏற்படுத்திவிடும்.