நம் குழந்தைகளுக்கு வாங்கி தரும் சாக்லேட்டில் 4% கரப்பான் பூச்சியும் கலந்துள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
விஷமென தெரிந்தும் நம் குழந்தைகளுக்கு அன்பாக வாங்கித்தரும் சாக்லேட்டில் உடம்புக்கு தேவை இல்லாத பொருட்களான சர்க்கரை, கெட்ட கொழுப்பு, பால், பிரிசர்வேட்டிவ், சுவையூட்டிகள் போன்ற பொருட்கள் மட்டும்தான் இருக்கிறது என நினைத்திருந்தோம். அனால் அதில் நமக்கு தெரியாத அதிர்ச்சி தரக்கூடிய ஒன்று தவிர்க்க முடியாத காரணத்தால் கலக்கப்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
சாக்லேட் தயாரிக்கும் போது அதனுடன் கோகோ பவுடர் அரைத்து சேர்ப்பார்கள், இந்த கோகோ பவுடர் கரப்பான் பூச்சியை கவரும் தன்மையுள்ளது. கோகோ பவுடரால் கவரப்படும் கரப்பான் பூச்சியுடன் போட்டு அரைத்து சாக்லேட் தயார் செய்துவிடுகிறார்கள்.
கோகோ பவுடரால் கவரப்படும் கரப்பான் பூச்சியை விரட்ட சாக்லேட் தயாரிக்கும் நிறுவனங்கள் பல முயற்சிகள் செய்தும் தடுக்க முடியாமல் போனதால் அமெரிக்க உணவு பாதுகாப்பு கழகம் 4 சதவீதத்திற்க்குள் கரப்பான் பூச்சியின் உடல் செல்கள் இருந்தால் அனுமதிக்கலாம் என முடிவெடுத்தது.
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் நமக்கு தெரியாமலேயே நமது குழந்தைகளுக்கு கரப்பான் பூச்சியை சுவைத்து தின்ன கொடுத்து வந்திருக்கிறோம். இதை தெரிந்த பிறகும் வாங்கி கொடுத்து வந்தீர்கள் என்றல் என்றாவது ஒரு நாள் உங்கள் பிள்ளைக்கு இந்த உண்மை தெரிய வரும் போது உங்களிடம் என்ன சொல்வான் என யோசித்து பாருங்க.
உங்க பிள்ளை சாக்லட்தான் வேணும் என அடம் பிடித்தால் அவர்களுக்கு இந்த பதிவை காண்பியுங்கள். படிக்க தெரியாத குழந்தைகளுக்கு சாக்லேட்டில் கரப்பான் பூச்சி இருப்பது குறித்து சித்த மருத்துவர் கூறும் இந்த விளக்கத்தை போட்டு கேட்க சொல்லுங்கள்.
சாக்லேட் மட்டிலுந்தான் இதுபோல உள்ளது என நினைக்காதீர்கள். ஒரு சில பிஸ்கட், ஐஸ்கிரீம் போன்றவைகளிலும் கரப்பான் பூச்சி கலந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
Also Read: பெற்றோர் பிள்ளைகள் உறவு மேம்பட, உங்கள் குழந்தைகள் பண்புள்ளவர்களாக வளர 10 சிறந்த வழிகள்.
காதலன் காதலிக்கும் பெண்ணிற்க்கோ, அண்ணன் தனது அன்பு தங்கைக்கோ, தாத்தா பாட்டி தங்களது ஆசை பேர குழந்தைகளுக்கோ அன்பின் அடையாளமாக சாக்லேட் என்ற கரப்பான் பூச்சியை வாங்கி தருவதை இனிமேலாவது நிறுத்துங்க..
அதற்க்கு பதிலாக கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், இலந்தை ஆடை, தேன் நெல்லி போன்ற நம்மூரிலேயே தயாரிக்கப்படும் இயற்க்கை தின்பண்டங்களை வாங்கி தரலாம். மூலிகை மிட்டாய் குறித்து முந்தைய ஒரு பதிவில் வெளியிட்டிருந்தேன் அதை கூட தாராளமாக வாங்கி தரலாம்.
இந்த தகவல் அதிர்ச்சியை தந்ததா? இதே அதிர்ச்சியை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் கொடுக்க அவர்களிடம் பகிர்ந்து விழிப்புணர்வை உண்டுபண்ணுங்கள்.
தொகுப்பு
பாபு சங்கரன் (Babu Sankaran)