Type Here to Get Search Results !

அந்தரங்க பகுதியில் இருக்கும் கருப்பு நிறத்தை போக்கும் வழிகள்..!

0
அந்தரங்க பகுதி கருப்பு நிற தோல் மறைய இயற்கை அழகு குறிப்புகள். Natural ways to remove dark spots under armpits, hidden places. Beauty tips in tamil, Alagu kurippugal. Karuppu nira thol maraiya iyarkai valigal
சிவப்பாகவும், மா நிறத்திலும் இருக்கும் பலருக்கு அந்தரங்க பகுதியில் கருப்பு நிறம் இருப்பது வழக்கம். அந்த இடத்தில இருக்கும் கருமையை நீக்கி வெண்மையாக மற்றும் வழிகளை பார்க்க போகிறோம்.

கற்றாழை:

சரும கருமை நிறத்தை போக்கும் அருப்புத இயற்கை பொருள் கற்றாழை, நம் உடலிலுள்ள இறந்த செல்களை நீக்கி புதுப்பிக்க கூடிய ஆற்றல் கற்றாழைக்கு உண்டு. இதை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் கருப்பு நிற தோல் மறையும்.

கற்றாழை ஜெல் எடுத்து கருப்பு நிற அந்தரங்க பகுதியில் தடவி இருபது நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவி வந்தால் கருப்பு நிறம் மறையும்.

எலுமிச்சை சாறு:


இதில் பிளீச்சிங் பண்புகள் அதிகம் இருப்பதால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதிய செல்கள் தோன்ற உதவி செய்கிறது.

எலுமிச்சையை பாதியாக வெட்டி ஒரு பாதியை கருப்பு நிறம் உள்ள பகுதியில் தேய்த்து 10 அல்லது 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவி வரவேண்டும். இப்படி செய்து வந்தால் ஒரு வாரத்தில் பலன் தெரியும்.

வெள்ளரி காய் சாறு:


வெள்ளரியில் உள்ள வைட்டமின் A சருமத்தில் உள்ள மெலனின் உற்பத்தியை கட்டுப்படுத்தி சரும கருமை நீங்கும் பண்பை பெற்றுள்ளது. இதில் நீர்ம சத்து அதிகமாக இருப்பதால் சரும வறட்சியை தடுத்து தோலை பொலிவாகவும், மிருதுவாகவும் வைக்கிறது.

வெள்ளரி சாறை எடுத்து கருப்பு உள்ள தோல் பகுதியில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒருநாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால் ஒரு வாரத்தில் தோல் நிறத்தில் மாற்றம் தெரியும்.

ஆரஞ்சு தோல்:


குப்பையில் தூக்கி எறியும் ஆரஞ்சு தோலை சேகரித்து காய வைத்து அதை அரைத்து  பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் விட்டமின் சி இருப்பதால் தோல் நிறத்தை பராமரிக்கும் குணம் நிறைந்துள்ளது.

2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் எடுத்து அதை அதே அளவு தயிர் மற்றும் சிறிது தேனுடன் கலந்து கருமை நிறைந்த அந்தரங்க பகுதியில் வாரம் இருமுறை தடவி கழுவி வந்தால் நல்ல பலன் கொடுக்கும்.

பாதாம்:


இரவு படுக்க போகும் முன் 5 அல்லது 6 பாதாம் பருப்பை நீரில் ஊற வைத்து மறுநாள் அதை பேஸ்ட் போல அரைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கருப்பு நிற தோல் பகுதியில் தடவி 10 அல்லது 15 நிமிடம் ஊற வைத்து பின் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் கருமை இடங்கள் மென்மையாக மாறிவிடும்.

இதை போல பேக்கிங் சோடா, சந்தனம், பப்பாளி போன்றவைகளையும் உபயோகித்து அந்தரங்க பகுதியில் உள்ள தோல் கருப்பு நிறத்தை வெண்மையாக மாற்றலாம்.

Dark spots can be more than just a reminder of your increasing age. You can easily remove most dark spots with the help of these natural ways.  

அந்தரங்க பகுதியில் இருக்கும் கருப்பு நிறத்தை போக்கும் வழிகள்..!

கருத்துரையிடுக

0 கருத்துகள்