செங் கற்றாழை கற்பம் - red aloe vera - kayakarpam
கொள்ளவே சிவப்பான கத்தாழைச் சோறும்
கொண்டு வர மண்டலந்தா னந்தி சந்தி
விள்ளவே தேகமது கஸ்தூரி வாசம் வீசும்
வியர்வைதான் தேகத்தில் கசியாதப்பா
துள்ளவே நரைதிரைக ளெல்லா மாறும்
சோம்பல் கொட்டாவி நித்திரையுமில்லை
கள்ளவே நாகமது உடம்பி லூறும்
கண்களும் செவ்வலரிப் பூப்போலாமே
நந்தீசர் - ஞானம்
சித்தர்கள் குறிப்பிடும் காய கற்ப மூலிகை, தாவர வகைகளில் இன்றைய கால கட்டத்தில் எளிதாக கிடைக்கும் வகைகளில் ஒன்றுதான் கற்றாழை ஆகும். இதனைப் பொதுவாக சித்தர்கள் 'குமரி' எனக் குறிப்பிடுகின்றனர் .உடலினை என்றும் இளமையாக வைக்கும் தன்மை இதற்குண்டு என்பதனை சித்தர்கள் தங்கள் மெய்ஞானத்தால் கண்டறிந்துள்ளனர்.
பொதுவாக கற்றாழையில் உடலிற்குத் தேவையான வைட்டமின் சத்துக்கள் ஏராளமாக உண்டு.இது உடலில் சேரும் நஞ்சுகளை வெளியேற்றி உடலின் செல்களை உயிர்ப்புடன் காக்கின்றது. எனவே இதனை முறைப்படி உண்டோமானால் முதுமை தோன்றாமல் தேகத்தை என்றும் இளமையுடன் (காய கற்பம்) காத்துக் கொள்ளலாம்.
சிவப்புக் கற்றாழையை மேலே உள்ள தோலை சீவி நீக்கி விட்டு அதன் சதைப் பகுதியை மட்டும் எடுத்து தண்ணீரில் அலசி விடவும்.பிறகு அந்த தண்ணீரை ஊற்றி விட்டு புது தண்ணீரை விட்டு அலசவும்.இதே போல் ஏழு முறை தண்ணீர் விட்டு கழுவி விட்டு எடுத்து திரிகடுகு தூளில் பிரட்டி மென்று உண்ணவும்.
இதே போல் காலை - மாலை உண்ணவும். தொடர்ந்து ஒரு மண்டலம் - 48-நாள் உண்ணவும். இதுவே காயகற்பம் ஆகும்.
இதன் பலன்கள் :
உடலில் கஸ்தூரி வாசனை வீசும், உடலில் வியர்வை வெளியேறாது, தலை முடி கருக்கும், பார்வைத்திறன் அதிகரிக்கும்.(நரை, திரை) மாறும். உடலில் முழுதும் பிராணன் நிரம்பும். சோம்பல், கொட்டாவி, தூக்கம் வராது.மனம் விழிப்பு நிலையில் நின்று "குண்டலினி"யோகம் சித்திக்கும்.
சிகப்பு கற்றாழை எங்கு கிடைக்கும் என என்னை கேட்க வேண்டாம் இது அபூர்வமானது எனக்கு தெரியாது...
நீங்கள் தேடலாம் கிடைத்தால் உங்கள் அதிர்ஷ்டம்...நன்றி ..
- Palani Yappan
Social Plugin