Type Here to Get Search Results !

அன்னாசி பழ கேசரி | Pineapple Kesari Recipe in Tamil

அன்னாசி பழ கேசரி சமையல் 


தேவையானவை:
  1. ரவை - முக்கால் கப்
  2. சர்க்கரை - 1 கப்
  3. அன்னாசிப்பழ ஜூஸ் - முக்கால் கப்
  4. காய்ந்த திராட்சை - தேவையான அளவு
  5. முந்திரி பருப்பு - தேவையான அளவு
  6. நெய் - 1௦௦ மில்லி 
  7. குங்கும பூ - சிறிது

கேசரி செய்முறை:

அன்னாசி பழ கேசரி | Pineapple Kesari Recipe in Tamil, Sweet recipes in tamil, Samayal seimurai
முக்கால் கப் ரவைக்கு 1 1/2 கப் தண்ணீர் எடுத்து கொள்ளவும்.
முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து எடுத்து கொள்ளவும்.
2 ஸ்பூன் நெய் விட்டு ரவையை வறுத்து கொள்ளவும். பிறகு அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும் அதனுடன் அன்னாசிப்பழ ஜூஸ், குங்குமப்பூ, சர்க்கரை கலந்து சர்க்கரை ரவை கரையும் வரை கிளறவும். கிண்டும் போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கொள்ளவும்.

தேவையென்றால் ஏலக்காய் சேர்த்துக்கொள்ளலாம். அன்னாசிப்பழ மனம் இருப்பதால் ஏலக்காய் தேவைப்படாது.

நன்கு வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி சூடு ஆறியதும் பைனாப்பிள் கேசரியை பரிமாறவும்.

Pineapple Kesari Recipe | Annasi Pazha Kesari Sweet samayal

Ravai - mukkal cup
sarkkarai - 1 cup
pinapple juice - mukkal cup
ular thiratchai - thevaiyana alavu
mundhiri paruppu - thevaiyana alavu
nei - 100 ml
kunkuma poo - siridhu

Pineapple Kesari seimurai

mukkal cup ravaikku 1 1/2 cup thanneer edutthu kollavum .

mundhiri thiratchaiyai neiyil varutthu edutthu kollavum.

2 spoon nei vittu ravaiyai varutthu  kollavum. piragu adhil 1 1/2 cup thanner ootri vega vaikkavum adhanudan annasipala juice, kunkumapoo, sarkkarai kalandhu sarkarai ravai karaiyum varai kilaravum. kindum podhu konjam konjamaaga nei sertthu kolavum. thevaiyendral elakkai sertthukollalaam.

annasipala manam iruppadhal elakkai thevaipadaadhu.

nangu vendhadhum aduppilirundhu irakki soodu ariyadhum pineapple kesariyai parimaaravum.