Type Here to Get Search Results !

வீடு மற்றும் வாகனத்தின் முன்னால் இதை கட்டுவது கண் திருஷ்டியை விரட்டவா?

வீடு மற்றும் வாகனத்தின் முன்னால் இதை கட்டுவது கண் திருஷ்டியை விரட்டவா, மூட நம்பிக்கையா அல்லது மருத்துவத்திற்கா?


kan thirusti, mooda nambikkai,  கண் திருஷ்டி நீங்க,  வீடு மற்றும் வாகனத்தின் முன்னால் கயிறு கட்ட காரணம் - கண்திருஷ்டி அகல விலக எளிமையான பரிகாரம், அரைஞான் கயிறு, araignaan kayiru
மூட நம்பிக்கை என பகுத்தறிவாளர்கள் சொல்லுவார்கள், கண் திருஷ்டி போகும், தீய சக்தி நம்மை விட்டு அகலும் என ஆன்மிகவாதிகள் சொல்வார்கள். ஆனால் இதை என்ன காரணத்திற்காக கட்டுகிறோம் என எவரும் ஆய்ந்துபார்க்க எண்ணுவதில்லை.  பூனைக்கு மணி கட்டும் கதை கேட்டிருப்பீர்கள் அதைப்போலதான் அனைவரும் காரணம் தெரியாமல் இதை செய்துவருகிறோம்.

பழங்கால தமிழர்கள் பல்லாண்டுகளாக அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் கண்டுபிடித்த மருத்துவ முறைகளை என்றென்றும் அழியாமல் பாதுகாப்பதற்காக சடங்குகள், தெய்வ வழிபாட்டு முறைகள் மற்றும் பழக்க வழக்கங்களாக பாதுகாத்து நம்மிடம் தந்துள்ளனர். ஆனால் நாம்தான் அதன் அர்த்தங்களை தெளிவாக புரிந்துகொள்ளாமல், அவை அனைத்தும் மூட பழக்கங்களாக நினைத்து ஒதுக்கி வைக்கிறோம்.


வீடு மற்றும் வாகனத்தின் முன்னால் கயிறு கட்ட காரணம்


சரி, நாம் ஏன் வீடு மற்றும் வாகனத்தின் முன்னால் இதை கட்டிவிடுகிறோம் என்ற விளக்கத்தை காண்போம்.

இதில் எலுமிச்சை, மிளகாய், ஒரு முள், சங்கு, படிகார கல் மேலும் சிலவற்றை வைத்து அதனை ஒரு கறுப்பு கயிறோ அல்லது கிடைக்கும் கயிற்றை கொண்டு கட்டி வாசலிலும், வாகனத்தின் முன் பகுதியிலும் கட்டி தொங்கவிடுவார்கள்.

இவை அனைத்தும் பழங்காலத்தில் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால் உடனடியாக கடிபட்டவரின் தலைக்கு விஷம் ஏறாமல் காப்பாற்ற முதலுதவி செய்வதற்காக உபயோகப்படுத்தப்பட்ட விஷக்கடிக்கான முதலுதவி கிட்(First Aid Kit).

மிளகாயை அல்லது எலுமிச்சையை வெட்டி கடிபட்டவரின் வாயில் வைத்தால் மிளகாய் காரமாக இருந்தால் விஷம் தலைக்கு ஏறவில்லை எனவே அவரை காப்பாற்றிவிடலாம் என்று கண்டுபிடிக்கவும், விஷம் தலைக்கு ஏறாத பட்சத்தில் உடனடியாக கடிபட்ட இடத்தை கீறிவிட்டு விஷ ரத்தத்தை வெளியே எடுக்க முள்ளும், மேலும் விஷம் தலைக்கு ஏறாமலிருக்க கட்டு போட கயிறும், அங்கே கிடைக்கும் மூலிகைகளை நசுக்கி கடிபட்ட இடத்தில் வைக்க கல், சங்கு போன்றவைகளும் பயன்படும்.

எனவே இவையனைத்தையும் ஒன்றாக சேர்த்து கட்டி அனைவரது வீட்டின் முன்புறமும் தொங்கவிட்டனர். தேவைப்படும் நேரம் எங்கேயும் தேடி அலையாமல் உடனே முதலுதவி செய்ய உபயோகித்து வந்தனர்.

அரைஞான் கயிறு


இதை போலவே நாம் இடுப்பில் காட்டும் அரைஞான் கயிறும்.

அரைஞான் கயிறு, araignaan kayiru
காடுகளில் பயணிக்கும் போதும் , வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் பொதும் விஷ ஜந்துக்கள் தீண்டிவிட்டால் கடிபட்டவர் தனக்கு தானே உடனடியாக கட்டு போட்டுக்கொண்டு கடிபட்ட விஷம் தலைக்கு ஏறாமல் முதலுதவி செய்து பாதுகாத்துக்கொள்ளவே அனைவரும் இடுப்பில் ஒரு கயிற்றை கட்டி வந்தனர். அது மட்டுமில்லாமல் கீழாடை கழண்டு கீழே விழாமல் பிடித்துக்கொள்ளவும் அந்த கயிறு உதவியாக இருந்ததும் அதன் சிறப்பு.

ஆனால் தற்போது நவீன மருத்துவம் வளர்ந்துவிட்ட காரணத்தாலும், பழங்காலத்திலிருந்து பின்பற்றிவரும் நல்ல பழக்கங்களின் மூலகாரணத்தை முன்னோர்கள் சரியாக சொல்லிவிட்டு செல்லாத காரணத்தாலும் இதை ஏன் செய்கிறோம் எதற்கு செய்கிறோம் என தெரியாமல் கண்திருஷ்டி, தெய்வ நம்பிக்கை என்று நினைத்துக்கொண்டு வீடு மற்றும் வாகனத்தின் முன் பகுதியில் கட்டி தொங்கவிட்டு வருகின்றனர்.

இதை போலவே பழங்காலத்திலிருந்து பின்பற்றிவரும் நல்ல பழக்கங்களின் விளக்கங்கள் உங்களுக்கு தெரிந்தால் இங்கே பதிவு செய்யுங்கள். அனைவரது அறியாமையை போக்கி தமிழரின் பெருமையை உலகறிய செய்வோம்.

idhai veedu matrum vaganathin munnal kattuvadhu kan thirustiyai virattava? Mooda nambikkiyaa alladhu maruthuvathirkkaa?

Mooda nambikki ena pagutharivaalargal solluvargal, kan thirusti pogum, theeya sakthi nammai vittu agalum enavum aanmiga vaadhigal solvaargal.

aanaal idhai enna kaaranathirkkaaga kattugirom ena siridhum aaindhupaarkka ennuvadhillai enenil anaivarum kaaranam theriyaamal poonaikku mani kattum kadhai kettiruppeergale andha nilaiyil dhaan irukkirom.

palangala tamilargal pallandugalaaga avargalukku erpatta anubavathin adippadaiyil kandupidittha maruthuva muraigalai endrendrum aliyaamal paadhukaappadharkkaga sadangugal, theiva valipaattu muraigal matrum palakka valaakangalaga padhukaatthu nammidam thandhullanar. aanaal naamdhaan adhan arthangalai thelivaaga purindhukollamal avai anaithum mooda palakkangalaaga ninaitthu othukki vaikkirom.

sari, naam veedu matrum vaganathin munnal kattividum idhan vilakkathai kaanbom.

idhil elumichai, milagai, oru mul, sangu, padigara kal melum silavatrai vaitthu adhanai oru karuupu kayiro alladhu kidakkum kayitrai kondu katti vaasalil, vaganathin mun pagudhiyil katti thongaviduvaargal.

ivai anaitthum palankalathil paambu, karun thel pondravai kaditthuvittal udanadiyaaga kadipattavarukku visham thalaikku eramal kaappatra mudhaludhavi seivadharkkaga ubayogapadutthapatta vishakadikku mudhaludhavi tharum First aid kid.

milagaiyai alladhu elumichaiyai vetti vaiyil vaithal milagai kaaramaaga irundhal kadipattavarukku visham thalikku eravilla enave kaappaatrividalaam endru kandupidikkavum, visham thalaikku eradha podhu udanadiyaaga kadipatta idatthai keerivittu visha rathathai edukka mullum, melum visham thalaiku eramal irukka kattu poda kayirum, ange kidaikkum mooligaigalai nasukki vaikka kal, sangu podravaigalum payanbadum ena ivaiyanaithaiyum ondraaga sertthu katti anaitthu vettin munpuramum katti vaitthu thevaipadum neram udane ubayogitthu vandhanar.

aanal tarpodhu naveena marutthuvam valarndhuvitta karanathalum, namdhu palngala palakkangalin moolakaranathai sariyaaga sollivittu sellaadha karanathaalum idhai en seigirom edharkku seigirom ena theriyamal kanthirusti, theiva nambikkai enbadhai kaaranaamaga kondu veedu matrum vaaganathin mun pagudhiyil katti  nalla valakatthai karanamariyaamal pinpatri varugindranar.

idhai polave naam iduppil kattum araignan kayirum. kaadugalil payanikkum podhu, vayalil velai seidhukondirukkum podhu visa jandhukkal theendivittal kadipattavare thanakku udanadiyaaga kattu pottukondu visham thalaikku eramal padhukaathukollave anaivarum iduppil oru kayitrai katti vandhanar. adhu mattumillamal keelaadai kalandu vilamal piditthukollavum andha kayiru udhaviyaaga irundhadhu adhan sirappu.