Type Here to Get Search Results !

சாப்பிட்ட‍வுடன் ஐஸ்கிரீம், கூல் டிரிங்க்ஸ் உடனடியாக ஏன் குடிக்கக் கூடாது?

சாப்பிட்ட‍வுடன் ஐஸ்கிரீம், கூல் டிரிங்க்ஸ் உடனடியாக ஏன் குடிக்கக் கூடாது?


ந‌ம் உடலின் இயக்க‍ம் நல்ல‍முறையில் இயங்கவும், நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) பெருகவும் உணவு அவசியமாகிறது. நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியம் தரும் உணவாக இருக்க வேண்டும்.
health tips, health tips In tamil: Unavu sapittaudan ice cream cold drinks kudikkalama? - Eating icecream after taking food
அப்ப‍டி ஆரோக்கியம் தரும் உணவாக இருந்தாலும் அந்த ஆரோக்கிய உணவை (பொதுவாக எந்த உணவாக இருந்தாலும் அதனை) சாப்பிட்ட‍வுடன் குளிர்பானங்கள் (Cool Drinks), பனிக்கூழ் (ICE Cream), குளிர்ந்த நீர்  (Cold Water- Cool Water) போன்றவற்றை உடனடியாக குடிக்கக் கூடாது.

காரணம் நாம் சாப்பிட்ட‌ உணவு ஜீரண மண்டலத்தை சென்றடையும் அது ஜீரணமாக நமது குடல்-க்கு தேவையான‌ வெப்பம் அவசியம் இருந்தால் ஜீரண சக்தி அதிகரித்து உணவு செரித்து அது மலமாக வெளியேறும். இதே சாப்பிட்ட‍வுடன் குளிர்பானத்தை (Cool Drinks), ஐஸ் கிரீம் (Ice Cream), ஐஸ் வாட்ட‍ர் (Ice Water) போன்றவை குடிக்கும்போது குடலுக்கு தேவைப்படும் அந்த வெப்பத்தை முற்றிலும் நீக்கிவிடுகிறது.

இதனால் உணவு செரிக்காமல் அஜீரணம் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு வித்திடுகிறது என மருத்துவர்களின் பொதுவான ஆழமான உண்மையான‌ கருத்து.