தந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியராக இருப்பவர் ரங்கராஜ் பாண்டே. இவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், எப்படி தமிழ் பயின்றார், தற்போது வாங்கும் சம்பளம் எவ்வளவு, இவரிடம் சொந்தமாக என்னென்ன சொத்துக்கள் இருக்கிறது என தெரியுமா?
பிகார் மாநிலம் பக்சரில் எனும் இடத்தில் பிறந்தவர். ரங்கராஜ் பாண்டே சிறுவயதில் இருக்கும் போதே அவருடைய குடும்பம் பீகார் மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வந்தது. இவருடைய அப்பா அம்மாவிற்கு இன்றும் சரியாக தமிழ் தெரியாது என அவரே கூறியுள்ளார்.
இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு பள்ளியில்தான் தனது பள்ளி படிப்பை தொடங்கியுள்ளார். பிறகு தமிழின் மீதிருந்த பற்றால் மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் சேர்ந்து MA தமிழ் படித்தார்.
1999 இல் கல்லூரி படிப்பை முடித்த பிறகு தினமலர் நாளிதழில் வேலைக்கு சேர்ந்தார். தினமலர் நாளிதழில் அவர் எழுதிய 'டவுட் தனபாலு' தமிழக மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தது.
2012 இல் தினதந்தி டிவி தொலைக்காட்சியில் சேர்ந்தார். சேர்ந்த ஒரு வருடத்திலேயே இரண்டு முறை பதவி உயர்வு பெற்றார். தற்போது தந்தி தவில் தலைமை செய்தி ஆசிரியராக பொறுப்பு வகிக்கின்றார். ஆயுத எழுத்து எனும் சிறப்பு நிகழ்ச்சியில் பல்துறை குறித்து, பல்துறை அறிஞர்களுடன் விவாதம் செய்வதில் வல்லவர். கேள்விக்கென்ன பதில் எனும் நேர்காணல் நிகழ்ச்சி மூலம் அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் செயல்பாடுகளில் உள்ள உண்மைத் தன்மைகள் குறித்து, பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்துவதில் சிறந்தவர்.
ரங்கராஜ் பாண்டேவின் அதிர்ச்சியூட்டும் கடந்த காலம் | Rangaraj Pandey before Thanthi TV
அவர் தொகுத்து வழங்கும் ஆயுத எழுத்து மற்றும் கேள்விக்கென்ன பதில் போன்ற நிகழ்ச்சிகளின் ஒவ்வொரு எபிசொடுக்கும் ஒன்றரை லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.
ரங்கராஜ் பாண்டே டிவி நிகழ்ச்சியோடு மட்டும் நின்றுவிடாமல் ஸ்கூல் மற்றும் காலேஜ் மோட்டிவேஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுகிறார்.
இவருக்கு சொந்தமாக ரோல்ஸ் ராய்ஸ், ஆடி போன்ற விலை உயர்ந்த சொகுசு கார்களும், சென்னையில் மூன்று வீடுகளும் இருப்பதாக தகவல், இது எந்த அளவு உண்மை என்பது உங்களுக்கு தெரிந்தால் கமெண்டில் தெரிவிக்கவும்...
Social Plugin