மூக்கில் அடிபட்டால் ரத்தம் வருவது இயல்பு. அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கிலிருந்து திடீரென்று ரத்தம் வடிவதுண்டு.
நடைமுறையில் வயதில் மூத்தவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் இந்தத் தொல்லை அதிகமாகக் காணப்படும்.
மூக்கு இரத்தப்போக்கு: மூக்கில் இருந்து ரத்தம் வடிவது முதலுதவி |
மூக்கிலிருந்து வரும் ரத்தத்தை அவர் விழுங்கிவிடக் கூடாது. அதனால்தான் முன்னால் குனியச் சொல்கிறோம். வாய் வழியாக ரத்தம் வர வாய்ப்புள்ளது. பயப்பட வேண்டாம். வாயிலிருக்கும் ரத்தத்தைத் துப்பச் சொல்லுங்கள்.
தலையைப் பின்பக்கமாக சாய்த்துவிடக் கூடாது. அப்படி சாய்த்தால், ரத்தம் வாய்க்குள் போய், நுரையீரலுக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே நிமிரவே கூடாது. மூக்கிலிருந்து ரத்தம் தொண்டைக்குச் சென்று குமட்டலை ஏற்படுத்தும். வாந்தி வரலாம். சமயங்களில் புரையேறி, இருமல் வந்து சேரும்.
மூக்கு சிந்தச் செய்யவும் கூடாது. விரலை நுழைத்து மூக்கை அடைக்கக் கூடாது.
**இத்தனை முயற்சிகளிலும் ரத்தக் கசிவு நிற்கவில்லை என்றால், அது மூக்கின் மேற்பகுதியிலிருந்துதான் வருகிறது என்று அர்த்தம். அதற்கு ரத்தக் குழாயைப் பொசுக்கி ரத்தக் கசிவை நிறுத்த வேண்டும். இதற்கு மருத்துவர் உதவியை நாட வேண்டும்.
Social Plugin