Type Here to Get Search Results !

சமையல்: ஸ்டஃப்டு கத்தரிக்காய் செய்முறை

*🍆அருமையான சைடிஷ் ஸ்டஃப்டு கத்தரிக்காய்🍆*

புலாவ், பிரியாணி, சாம்பார், ரசம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ஸ்டஃப்டு கத்தரிக்காய்.
ஸ்டஃப்டு கத்தரிக்காய், Stuffed Brinjal Recipe in tamil, Stuffed Katharikkai samayal seimurai

செய்ய தேவையான பொருட்கள் :
சிறிய கத்தரிக்காய் - 15,
தேங்காய் துருவல் - அரை கப்,
எண்ணெய் - அரை கப்,
காய்ந்த மிளகாய் - 5,
புளி - கொட்டைப் பாக்களவு,
உப்பு - தேவையான அளவு,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
தனியா - ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை :
மிக்சியில் தனியா, தேங்காய், உப்பு, காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், புளி எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

கத்தரிக்காயின் காம்பை நீக்காமல் நான்காக வெட்டி பிளந்து பூச்சியில்லாமல் இருக்கிறதா என பார்த்து, அரைத்து வைத்திருக்கும் மசாலாவை கத்தரிக்காயில் அடைத்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, ஸ்டஃப்டு கத்தரிக்காய்களை போட்டு கிளறி மூடி வைக்கவும். அடிக்கடி கிளறி விடக்கூடாது. மிதமான தீயில் கிளறி, நன்றாக வெந்து எண்ணெய் பிரியும்போது இறக்கி பரிமாறவும்.

சூப்பரான சைடிஷ் ஸ்டஃப்டு கத்தரிக்காய் ரெடி.