சளி, இருமல், வீக்கம் போன்ற தொண்டை அழற்சிக்கு - வெற்றிலை ரசம் - தயாரிப்பு முறை
வெற்றிலையில் அபரிமிதமான மருத்துவ குணங்கள் இருப்பதால், நமது மூதாதையர் அதனை பாக்குடன் சுவைத்து வந்தனர். குறிப்பாக வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது. உடலுக்கு வெப்பம் தரும் இந்த வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தை போக்குவதோடு, சிறுநீரக பெருக்கியாகவும் இருக்கிறது. வெற்றிலையை மெல்லுவதினால், ஈறுகளில் இருக்கின்ற வலி, இரத்த கசிவு ஆகியவற்றை நீக்கி, ஆட்டம் காணும் பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை தயார் செய்கிறது.
சளி, இருமல், வீக்கம் போன்ற தொண்டை அழற்சிக்கான வெற்றிலை ரசம் தயாரிப்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெற்றிலை, மிளகுப்பொடி, திப்பிலி, பூண்டு, பெருங்காயப்பொடி, உப்பு.
தயாரிப்பு முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, நசுக்கிய பூண்டு, திப்பிலி, பெருங்காயப்பொடி மற்றும் மிளகுப்பொடி சேர்க்கவும். அதனுடன் நறுக்கிய வெற்றிலையை சேர்த்து கொதிக்கவிடவும். வெற்றிலை நன்கு வெந்ததும், ரசத்தை வடிகட்டி அருந்தலாம்.
டான்சில்ஸ், வீக்கம் போன்ற நோயால் பாதிக்கப்படுவோர் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
வாயு தொல்லைகளை நீக்கி, உள்ளுறுப்புகளை தூண்டக்கூடிய வெற்றிலையில் வைட்டமின் சி சத்துக்கள் மற்றும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன.
அனல்மூட்டிய வெற்றிலையை மார்பில் பற்றாக போடுவதால் சளி, இருமல் குறையும்.
சளி, இருமல், சரியாக வெற்றிலை இயற்க்கை மருத்துவம். vettrilai rasam, sali irumal sariyaaga thondai noi theera iyarkai Marundhu thayarippu murai, iyarkai maruthuvam, iyarkai vaithiyam, cold, cough cure medicine beetle leaves
Social Plugin