Type Here to Get Search Results !

அடிபட்ட புண், வெட்டு காய புண்களை விரைவில் ஆற்றும் அதிசய மூலிகை

Natural medicine to cure wounds, adipatta pun, vettu kayam viraivil aara vudavum adhisaya mooligai kinattru poondu,  thattha sedi, vettu kaaya poondu, Tridax procumbens Linn, mookuthi poo, Mooligai Maruthuvam, Iyarkkai Maruthuvam, iyarkai vaithiyam,
அதிசய மூலிகை..! (மூக்குத்திப்பூ, காயப்பச்சிலை, கிணற்றடிப் பூண்டு,
வெட்டுக்காய பூண்டு, தாத்தா செடி,  உரம்புப்பூடு, தலைவெட்டியான்,
முறிஞ்சான் குழை என பல பெயர்கள் இதற்குண்டு )
 
எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் குடியிருந்த அம்மையாருக்கு கணுக்காலுக்கு மேல் புண் ஏற்ப்பட்டு பெரிதாகி அழுகி இருபுறமும் ஓட்டை தெரியும் அளவு வளர்ந்து படுத்த படுக்கையாகி விட்டார். மருத்துவர்கள் முழங்காலிற்கு கீழ் காலை அகற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் மேலே ஏறி ஆபத்தாகி விடும்.என்று கூறிவிட்டார்கள். அந்த அம்மையாருக்கு சர்கரை நோய் இருந்திருக்கும் போல.அந்த அம்மையார் கதறிவிட்டார்.

பக்கத்து வீடாகையால் எங்களுடன் சண்டையில் பேசாமல் இருந்தார்கள்.என் தந்தை அந்த அம்மையாரின் மகனைக்கூப்பிட்டு விபரம் கேட்டார்.அவர் விவரத்தைக் கூறியதும் என் தந்தையுடன் நானும் (எனக்கு 12 வயதிருக்கும் அப்போது.) அவர்கள் வீட்டிற்குச் சென்றோம். என் தந்தை அந்த அம்மையாரின் காலைப் பார்த்து விட்டு கவலைப்படாதே உன்னை பழைய ஆள்மாதிரி நடக்கவைக்கிறேன் என்றார்.

எனக்கோ கடும் அதிர்ச்சி அவர் காலிலிருந்து சீழுடன் கடும் நாற்றம் வேறு எட்டியே நின்று கொண்டேன். அந்த அம்மையாரின் குடும்பத்தினர் மற்றும் நான் உட்பட ஏதோ ஆறுதலாக கூறுகிறார் என்றுதான் நினைத்தோம்.மறுநாள் காலை 6 மணிக்கு ஏதோ பச்சிலையுடன் வந்து அந்த அம்மையாரின் காலில் மூலிகையைக் கசக்கி சாறை வடியவிட்டு மூலிகையையும் உள்ளே வைத்து வெள்ளைத் துணியால் கட்டுப்போட்டார்.அவ்வப்பொழுது தண்ணீரை அள்ளி கட்டில் நனைத்துக் கொள்ளச் சொன்னார்.காலை, மாலை இதேபோல் செய்தார்.என்ன ஆச்சரியம் 25 நாட்களில் அந்த அம்மையார் முழு குணமாகி நீண்டகாலம் வாழ்ந்தார்.இதற்கு பத்துபைசா வாங்கவில்லை என் தந்தை. அது இன்னும் என் நினைவில் உள்ளது.

அந்த மூலிகை மூக்குத்திப்பூ, காயப்பச்சிலை, கிணற்றடிப் பூண்டு என பல பெயர்களில் அழைக்கப்படும் மூலிகை இது. புற்று நோயை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது.
 
Source: (ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்@ FB)
 
Comments: 
 
 Ravi Kumar S இது மிக அதிசயமான மூலிகை எனக்கு கால் முட்டியில் மற்றும் பாதத்தில் அடிபட்டு புண் ஆகிய அதே வேலையில் முழங்கால் எலும்பிலும் அடிபட்டு வீங்கியது. உடனே இந்த தழையை பறித்து சாற்றை எடுத்து பஞ்சில் நனைத்து காயத்தில் போட்டேன் வீக்கத்திலும் தடவினேன் ஆச்சரிய படும் விதமாக வீக்கம் 5 நிமிடங்களில் காணாமல் போனது காயங்களின் மீது தொடர்ந்து தடவி வர எந்த வலி சீழ் பிடித்தல் போன்ற தொல்லை இன்றி ஒரு வாரத்தில் ஆறியது.வேறு எந்த மருத்துவமும் இல்லை.எனக்கும் சர்க்கரை நோய் உள்ளது.
 
Kavitha Kaliappan இது வெட்டுக்காய பூண்டு.ட்ரைடாக்ஸ் புரோக்கம்பன்ஸ் என்பது இதன் தாவரவியல் பெயர்.
 
Ganesh Kumar இதை நாங்கள் தாத்தா செடி என்று அழைப்போம். நான் கிரில் பட்டறை வைத்துள்ளேன், எங்களுக்கு படும் காயங்களுக்கு இந்த செடியே மருந்து.
 
John Benjamin In Tamil Nadu at least 10 legs are amputated everyday due to diabetic gangrene ,especially in villages how come this wonderful medicine is not used. How come the active ingredient is not isolated and used for all the diabetic ulcers.
 
Gandhimathi Vadivel Another medicinal plant that cure these type of disease is kuppaimeni.... In my experience... it cures a child who has a heavy injury in her leg... Kuppaimeni, onion and turmeric.
 
John Rabi Kumar The juice obtained from its leaves is a good medicine for any type of frrsh injury . We had used it during our school days when we met with injury during.our play and was freely available. We call it muriam pachilai. It is also a good food for rabbits.
 
Mohamed Eusuff Bryan Yes this plant's leaves can cure heart blockage too. my Chinese friend takeing 2 leaves everyday.in Singapore u.can find them growing along the roadside pavement,easy available.
 
Manickam Ramachandran இது போர்க்களத்தில் காயம்படும் வீர்களுக்கு காயம் குணமாக அரசர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்டது.
 
Jeyem Animalcare Trust இதனை உரம்புப்பூடு என்றும் தலைவெட்டியான் எனறும் கூறுவார்கள் இதன் இலையை எடுத்து புண் மேல் சாறு பிழிந்து விட்டால் இரண்டு மூன்று நாட்களில் புண் ஆறி விடும் முயற்சியித்து பலன் பெறுக.
 
Aca Ananthan முறிஞ்சான் குழை...என்போம்!
பள்ளி விட்டு வந்ததும் ...பெட்டி
நிறைய கொண்டு வந்து ...ஆட்டுக்கு

கொட்டும் ..அந்தக்கால நினைவுகள் !!
 
Sujindhiran Ram அடபாவிகளா வெளிநாட்டு விசசெடிகளையெல்லாம் வீட்டுக்குள்ள வளர்த்திட்டு உள்ளுர் மூலீகை செடியெல்லாம் அழிச்சுட்டு அதை ஆபூர்வ மூலிகைனு சொல்ரிங்கலே.
 
 
Senthil Kumar Tridax procumbens Linn. (Compositae) is widely
distributed weed. Each and every part of it is
useful having pharmacological activity. The plant

product over synthetic compound is the need in
treatment of diseases, as it does not have any
deleterious effect in higher animals including
man. India is home to a variety of traditional
medicinal systems that rely to a very large extent
on native plant species for their raw drug
material. The work done till date on various
pharmacological activities like hepatoprotective
effect, immunomodulating property, wound
healing activity, antidiabetic, antimicrobial, anti
inflammatory and antioxidant, bronchial catarrh,
diarrhea, dysentery and hair treatment give
immense importance to the herb. The qualitative
analysis revealed the presence of the
biomolecules such as anthraquinone, catachol,
flavonoids, phenolic compounds, saponins,
steroids, tannins and terpenoids. The studies on
plant Tridax procumbens also desire
development of novel therapeutic agents from
the various types of compounds with diverse
pharmacologic properties isolated from it.
Therefore, there is huge room for research in
direction of more pharmacological activities of
plant and to elucidate the mechanism of action of
same in future
 
 
 
 
 
 
 
 
Damodharan Srinivasan வெட்டு தலக்காய் இலை வெட்டு காயத்திற்கு இலையை நன்றாக கசக்கி காயத்தில் வைத்தால் இரத்த கசிவு உடனே நின்று விடும் இது என்னுடைய அனுபவம்  
 
Natural medicine to cure wounds, adipatta pun, vettu kayam viraivil aara vudavum adhisaya mooligai kinattru poondu,  thattha sedi, vettu kaaya poondu, Tridax procumbens Linn, mookuthi poo, Mooligai Maruthuvam, Iyarkkai Maruthuvam, iyarkai vaithiyam,