Type Here to Get Search Results !

கண்களை பாதுகாப்பாக வைத்திட உபயோகமுள்ள இயற்க்கை வைத்திய குறிப்புகள்

 கண்களைப் பாதுகாக்க சில  இயற்க்கை வைத்திய குறிப்புகள்


  • கண்சிவப்பு, கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தல்: ஒரு சிறிய வெந்நிறத்துண்டை, மஞ்சள் நீரில் நனைத்து நிழலில் உலர்த்தி வைத்து கொள்ள வேண்டும். கண்நோய் உள்ளவர்கள் அந்த வெண்ணிறத் துண்டுகளைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தல் இவைகள் சரியாகும்.
    iyarkai vaithiyam, Natural treatments in Tamil,  கண்களைப் பாதுகாக்க இயற்க்கை வைத்திய குறிப்புகள், கண் சிவப்பு, கண்வலி கண் பார்வை கூட உபயோகமுள்ள இயற்க்கை வைத்திய குறிப்புகள்
  • கண்கள் பிரகாசமாக: இரண்டு தேக்கரண்டி உப்பை ஒரு லிட்டர் இளம் சூடான நீரில் சேர்த்து, கண்களைக் கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
  • கண்கள் சிவப்பது: உடல் சூட்டினால் அல்லது கண்ணில் அடிபட்டதாலோ கண் சிவந்து காணப்படுவது உண்டு. இதற்கு புளியம்பூவை அரைத்து கண்களைச் சுற்றிப் பற்று போட்டு வந்தால் கண்கள் சிவப்பது சரியாகும்.
  • கண் நரம்புகள் பலப்பட: பொன்னாங்கண்ணிக் கீரையுடன் நெய்யையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் நரம்புகள் பலப்படும், பார்வை தெளிவடையும்.
  • கண் சிவப்பு: மருதோன்றி இலையை அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் கண் சிவப்பு நீங்கும்.
  • கண் பார்வைத் தெளிவு பெற கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர வேண்டும்.
  • கண்வலி: நந்தியாவட்டைப் பூவை கண்களில் ஒற்றிக்கொண்டால் கண்வலி நீங்கும்.
  • நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.
  • கண்ணிலிருந்து நீர்வடிதல் குணமாக:  மிளகு, சீரகம் இவற்றில் சிறிதளவு எடுத்து பொடி செய்து, எண்ணெயில் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால் கண்ணிலிருந்து நீர்வடிதல் மற்றும் கண் எரிச்சல் குணமாகும்.
  • மல்லித்தழை மற்றும் கேரட்டை தேங்காய்ப்பால் சேர்த்து அரைத்து தினமும் குடித்துவர கண் நரம்புகள் பலப்படும்.
  • மலைவாழைப்பழம், ஆப்ரிகாட் பழம் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் அரை கப் தயிர் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.
    கண்பார்வை அதிகரிக்க: மலைவாழைப்பழம், ஆப்ரிகாட் பழம் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் அரை கப் தயிர் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.
  • கண் பார்வை கூட: கடுக்காய்த் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை ஆற்றல் அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும்.